618
கலைஞர் மு. கருணாநிதி
618 கலைஞர் மு. கருணாநிதி டது. என்னுடைய அவல நிலையினைக் கேள்வியுற்ற அவர், 'சிறிது காலம் என்னுடன் ரோமாபுரியில் வந்து தங்கிவிடேன்.உன்னுடைய மன நிலை சரியானவுடன், தமிழகத்திலும் அரசியல் கொந்தளிப்புகள் அடங் கியவுடன் நீ உன் தாயகத்திற்குத் திரும்பி வரலாம்'-என்றார். அவருடைய வற்புறுத்தலினால்தான் நான் ரோமாபுரிக்கு வந்து சேர்ந்தேன்." "ஆமாம், இங்கே வந்ததும் ஜூனோவாக எப்படி மாறினாய்?" "ம் அதுவும் ஒரு சுவையான கதைதான்! யவனக் கிழவர் இல்லத்திற்கு அந்த உண்மையான ஜூனோ ஒரு முறை வந்தாள். முதற் சந்திப்பிலேயே நாங்கள் இணை பிரியாத தோழிகளாகிவிட்டோம். எங்களுடைய உருவ ஒற்றுமையோ, எங்களை இரட்டைப் பிறவிகள் என்றே சொல்லும்படி யாக அமைந்துவிட்டது! அந்தச் சமயம் அகஸ்டஸ் பெருமகனாருக்குத் தம்முடைய ஆட்சிப்பொறுப்பினுக்கு மேசனஸ் போன்ற நயவஞ்சகர் களால் இடையூறு உண்டாகலாமோ என்கிற அச்சம் முளைவிட்டுக் கொண்டிருந்த நேரம். மேசனஸ் என்பவர் இலக்கியப் புலமையில் ஆர்வங்கொண்டவரே தவிர, ஆட்சி நடத்துவதற்குத் தேவையான கூர்மை மிகுந்த தொலைநோக்கோ, அலுக்காமல் உழைக்கக் கூடிய சுறுசுறுப்போ, புதிய புதிய திட்டங்களை உருவாக்கிடும் சுய சிந் தனையோ, அந்தத் திட்டங்களை விரைந்து நிறைவேற்றிடும் செய லாற்றலோ அவருக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அகஸ்டஸ் அவர்கள் வெளிநாடுகளில் எதிரிகளோடு பொருதிக்கொண்டிருந்த வேளையில் சிறிது காலம் ரோமாபுரி நகரின் நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டார் என்பதைத் தவிர, வேறு பெருமிதப்படத்தக்க அளவுக்கு ஆட்சி அனுபவம் உண்டு என்றும் கூறிட முடியாது. ஆனாலும் அவருக்கும் ஆட்சித் தலைவராக ஆகிட வேண்டும் என்று அடக்கவொண்ணாத பேராசை. அதனால்தான் அகஸ்டசைத் தந்திரமாக வீழ்த்துவதில் தம் சிந்தனையைச் செலவிட முனைந்திட்டார். அவருடைய நடவடிக்கை களை உளவு அறிவதற்குத் தகுதியான நம்பிக்கைக்கு உரிய ஆட்கள் சிலர் அகஸ்டசுக்கு அப்போது தேவைப்பட்டார்கள். மற்றவர்களைவிட ஜூனோவை அந்த ஒற்றுவேலையில் ஈடுபடுத்துவது நல்லதாயிற்றே என்று அவர் எண்ணிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த வேளையில் தான் ஜூனோ ஒரு நாள் என்னை அவரிடம் அறிமுகப்படுத்தி வைத்தாள். என்னைக் கண்டதுமே எங்கள் இருவருடைய உருவ ஒற்றுமையையும் பயன்படுத்தி உண்மையான ஜூனோவை நம்முடைய முத்துநகையைப் போல ஆணாக உலவவிடத் திட்டமிட்டு விட்டார்.' - "நீ சொல்வதைக் கேட்கக் கேட்க எனக்கு ஒரே வியப்பாக இருக்கி றதே! ஆமாம். என்னை முதன்முதலில் ரோமாபுரியில் வரவேற்றுக் கை குலுக்கியது நீதானா? அந்த உண்மையான ஜூனோவா?