ரோமாபுரிப் பாண்டியன்
15
ரோமாபுரிப் பாண்டியன் 15 இடங்களில் அவ்வளவு தமிழ் அறிவு எல்லோருக்கும் இருக்குமோ என்று எனக்கு ஒரு ஐயப்பாடு எழுகிறது. சில இடங்களில் சங்க காலத் தொடர்களையே எழுதியிருக்கிறார். சில இடங்களில் அவர் 'கழறினார்' என்று எழுதியிருக்கிறார். கூறினார். பேசினார், சொன்னார் என்று எவ்வளவு வகைகளிலே சொல்லலாம். கழறினார் என்ற சொல்லைச் சிறிது இலக்கியம் படித்தவர்கள்தான் அறிவார்கள். இது ஒன்று, நான் சொல்ல வேண்டியது. மற்றொன்று, கடைசியாக ஒன்றைக் கூறுகிறேன். நானாகக் கண்டுபிடித்தது இது. ஆகையால் இதைச் சொல்லிவிட்டு நான் முடித்துக் கொள்ளலாம் என்று கருதுகிறேன். எனக்குச் சில வேளைகளில் தோன்றுகிறது. தனி மனிதனின் கற்பனை என்பதே ஓரளவு நாம் தவறாக எண்ணுவதோ என்று எனக்குத் தோன்றுகிறது. அதாவது கற்பனைக் கடல் என்பது தனி மனிதனை மாத்திரம் குறித்தது அல்ல. இந்தக் கற்பனைக் கடல் உலகெங்கும் பரவியிருக்கிறது. எல்லா மனிதர் உள்ளத்திலும் இருக்கிறது. ஆகையால் ஏதோ ஒரு நூற்றாண்டில் வாழ்ந்த ஏதோ ஒரு புலவனுடைய கருத்து, அவனைச் சிறிதும் அறியாத மற்றொரு நூற்றாண்டில் வாழ்ந்த மற்றொரு கவிஞனின் கவிதையில் மிளிர்வதைப் பார்த்தால் இந்தக் கவிதை உள்ளம் என்பது ஒருவருக்கு மட்டும் சொந்தம் இல்லையோ என்று எனக்குத் தோன்றுகிறது. இதற்கு ஒரு சிறு விளக்கம் கூறு வேன். அந்த விளக்கம் ஏன் என்றால் நமது கலைஞருக்கு மிகவும் பிடித்தமான கலிங்கத்துப்பரணி என்ற நூலில் இருந்து எடுத்தது. செயங்கொண்டான் என்ற குலோத்துங்கச் சோழனின் அவைப் புலவர் எழுதியிருக்கிறார். போர்க் களத்தை விவரிக்கும்போது இந்தப் பாட்டு வருகிறது. "தரைமகளும் தன்கொழு நன் உடலந் தன்னைத் தாங்காமல் தன் கரத்தால் தாங்கி விண்ணாட்(டு) அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம் ஆவியொக்க விடுவாளைக் காண்மின் காண்மின்" அந்தக் கற்பரசியானவள் பூமாதேவி தன் கணவனுடைய சவத்தை அவள் மடியில் வைத்துக்கொள்ளக்கூடாது என்று, தன் மடியில் வைத்து, அவன் உயிர் தேவலோகத்துக்குப் போனால் தேவ அணங்கினர் தழுவி விடுவார்களோ என்று, உயிரைக் கூடவே விடுகிறாள் என்று வர்ணித்துக் கூறுகிறார். இவர் 8-ஆவது நூற்றாண்டில் (எனக்குச் சரியாக வரலாறு தெரியவில்லை, மறந்துபோய்விட்டது) குலோத்துங்கச் சோழன் காலத்தில் வாழ்ந்த அவைப் புலவர். அதில் சிறிதும் ஐயப்பாடு இல்லை. 15ஆவது 16ஆவது நூற்றாண்டில் மகாகவி ஷேக்ஸ்பியர், அந்தோணியும் கிளியோபாட்ராவும் என்ற நாடகத்தை எழுதியிருக்கிறார். அவருக்குச் செயங்கொண்டான் என்றால் யார் என்றே தெரியாது. தமிழும் தெரியாது. இந்தியாவும் தெரியாது. அவர் எழுதும்போது, இந்தக் கிளியோபாட்ரா என்பவள் ஒரு நாகத்தை மார்பில் தீண்ட வைத்துத் தற்கொலை புரிந்து கொள்கிறாள். ஐராத் என்ற அவளது பணிப்பெண்ணும் அது