உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன்பவாழ்வு.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




முன்னுரை.

யற்கை வாழ்வே இன்ப வாழ்வு' என்பது பழந் தமிழர் கொள்கை. அன்னார் இயற்கையோடு கலந்த இன்ப வாழ்வை நடாத்தினவர் என்பதைப் பண்டைத் தமிழ் நூல்களில் இன்னுங் காணலாம்.

இடைக்காலத்தில் பழந்தமிழர் கொள்கை வீழ்த்தப் பட்டது. அன்று தொட்டு நாடு உரிமையுணர் விழந்து வறுமைக்கும் பிணிக்கும் இரையாகி நரகத்துன்பத்தில் வீழ்ந்து கிடக்கிறது. மீண்டுந் தமிழ்நாடு பழைய நிலை யெய்த வேண்டுமாயின், அஃது இயற்கை வாழ்வில் பழையபடி தலைப்படல் வேண்டும். இக்கொள்கையை ஒல்லும்வகை பல வழியிலும் பரப்ப வேண்டுமென்பது எனது விருப்பம். இவ்வுணர்வு தோன்றிய நாள்தொட்டு யான் எம்மேடைமீது பேசினும் எந்நூலெழுதினும் இக் கொள்கையை எம்மூலையிலாவது வலியுறுத்துவது வழக் கம். எனது "நவசக்தி" பத்திரிகையிலும் இயற்கை வாழ்வைப்பற்றிப் பன்முறை எழுதியிருக்கிறேன். அவ் வாறு எழுதப்பெற்ற கட்டுரைகளுள் இன்பவாழ்வு என்னும் இக்கட்டுரையுமொன்று.

CC

""

இக்கட்டுரையைச் சிறு நூல் வடிவாக்கி வெளியிட வேண்டுமென்று விரும்பிக் கொப்பனாப்பட்டி விவேகா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன்பவாழ்வு.pdf/4&oldid=1710615" இலிருந்து மீள்விக்கப்பட்டது