உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

என்னவென்றால், மனை விலை ஏறி இருப்பதால், கட்டட சாமான்கள், செங்கல் மற்ற பொருள்கள் விலை உயர்ந்திருக்கிற காரணத்தால், அவன் கொடுக்க வேண்டிய 10 சதவிகித பங்கை செலுத்த முடியாமல், அந்த அளவிலே தொழிலாளிகளுக்கு வீடு கட்டும் இந்த திட்டம் வெற்றிகரமாக இல்லை. கிராமங்களில் வீடு கட்டும் திட்டத்தில் மனை நீங்கலாக ஆகிற செலவில் 80 சதவிகிதம் கடன் ஆகவும் தரப்படுகிறது. விளை நிலத்தை ஈடாகத் தந்தால், 87 1/2 சதவிகிதம் கடனாகத் தரப்படுகிறது. இதற்குப் பதிலாக வீடு கட்டும் திட்டத்திலே, வாடகைக்கு காலனிகளைக் கட்டி, கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு வீடுகளைச் சொந்தமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். கடனைப் பெறுவதற்கு ஈடாக மனைகளையோ அல்லது வேறு று சொத்துகளையோ, விளை நிலங்களையோ காட்ட வேண்டிய நிலைமையில் மாறுதல் ஏற்படவேண்டும். நடுத்தர வர்க்கத்தினர் ஆனாலும் சரி, அதற்குக் குறைந்த நிலையில் இருக்கிறவர் களானாலும் தரப்படும் கடன் உதவி விஷயத்தில் கூட்டுறவு நிறுவனங்கள் நல்ல முறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்ளுகிறேன். கிராமங்களில் ஆகட்டும், சிறு நகரங்களிலாகட்டும், இந்தக் கடன் உதவி பெற்று கட்டப்படுகிற வீடுகளெல்லாம் நகரப் புரத்தின் எல்லையில், அதன் ஓரத்தில்தான் அமைகின்றன. உள்ளே நகரத்தின் நடுவே அல்லது கிராமத்தின் நடுவே அதற்கு போதுமான இடம் இல்லாத காரணத்தினால் அப்படி ஓரங்களில் வீடுகள் கட்டப்படுகின்ற காரணத்தினால் வெளியிலே பார்வைக்கு அழகாக, கிராமத்தில் கட்டப்படுகின்ற புது வீடுகள் இருக்கின்றனவே தவிர கிராமங்களின் உள்ளே இருக்கும் வீடுகள் பொலிவு இழந்தும் இடிபாடு உள்ளதாகவும் காட்சி அளிக்கின்றன. ஆகவே புதிய வீடுகள் கட்டுவதற்கு மட்டுமல்லாமல், பழைய வீடுகளைப் புதுப்பிக்கவும் இந்தக் கடன் உதவி திட்டம் அமல் படுத்தப்படவேண்டும் என்று நான் கேட்டுக் கொள்வேன். அதற்கு பாங்குகள் மூலம் அத்தகைய கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்" என்று அமைச்சர் சொல்லலாம் ; ஆனால் இந்த முறையில்தான் 20 ஆண்டு காலத்தில் அவர்கள் கொஞ்சம் கொஞ்சம் ஆக அந்தக் கடனைத் திருப்பித்தரும் சூழ்நிலையும்

A.

ம்