உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது

கட்சி மாச்சரியங்களுக்கு கடைசியாக ஒரு உதாரணம் கூற விரும்புகிறேன். அரக்கோணம் தாலுகாவில் பணப்பாக்கம் பிர்க்காவில் கூட்டுறவு விவசாய பாங்கில் கடன் தருவதற்காக கடன் கேட்டவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு, கையெழுத்திடவேண்டிய நிலையில், தலைவர் 'யார், இவருக்கா கடன்' என்று புருவத் தை நெறித்து, 'இவர் தேர்தலில் எனக்கு எதிராக இருந்தாரே' என்று கேட்டு, கையெழுத்திட மறுத்துவிட்டதாகச் செய்தி வருகிறது. இவைகளெல்லாம் கூட்டுறவு ஸ்தாபனத்தில் புறையோடக்கூடிய புண்களாக ஆகிவிடாமல் எச்சரிக்கையோடு அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டு, நல்ல நோக்கத்தோடு தொடங்கப்பட்ட, இன்றையதினம் வேறு மாநிலங்களை விட விசேஷமாக நடைபெறுகிறது என்று பாராட்டப்பட்டிருக்கிற, கூட்டுறவு இயக்கம் மேலும் மேலும் வளத்தோடும் நல்ல பெயரோடும், சீரோடும், சிறப்போடும், புகழோடும், பொலிவோடும். வளர்வதற்கு அமைச்சர் அவர்கள் ஆவன செய்யவேண்டுமென்று கேட்டுக்கொண்டு, என்னுடைய உரையை முடித்துக்கொள்கிறேன். வணக்கம்.

ம்