உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

99

உரை : 11

கல்விக் கொள்கை மானியம்

நாள் : 01.04.1963

ச்

கலைஞர் மு. கருணாநிதி : சட்ட மன்றத் துணைத் தலைவர் அவர்களே, இன்று இன்று இந்த இந்த மாமன்றத்திலே வைக்கப்பட்டுள்ள கல்விக் கொள்கையைப் பற்றி என்னுடைய கருத்துக்களை எடுத்துக் கூற நான் கடமைப்பட்டிருக்கிறேன். நேற்று முன் தினம் இந்தக் கொள்கையைப் பற்றி ஆளும் கட்சி உறுப்பினர் ஈரோடு நண்பர் அவர்கள் பேசும்போது, 'கல்வியைப் பிடித்திருந்த சனி தொலைந்தது' என்று சொன்னார்கள். அவர் பேசிய அந்தத் தினம்கூட சனிக்கிழமைதான். சனி தொலை வதற்கு ஞாயிறு காரணமாக இருந்து கல்விக் கொள்கை என்ற திங்கள் இப்போது வந்திருப்பதாக அமைச்சர் அவர்கள் கூறக்கூடும். சனி தொலைவதற்குக் காரணமாக இருந்த ஞாயிறு என்பதற்குச் சூரியன் என்றுகூடப் பொருள் உண்டு. அந்தச் சூரியனை உதயசூரியன் என்று நான் குறிப்பிடுகிறேன் என்று அமைச்சர் அவர்கள் கருதிக்கொண்டால் அதை நான் மறுக்க விரும்பவில்லை. இந்தக் கல்விக் கொள்கை திங்களாக வந்திருக்கிறது என்று நாம் எண்ணிக் கொள்வோமானால் - திங்கள் என்றால் சந்திரன், அந்தச் சந்திரனிலே களங்கம் இருப்பதுபோல் கல்வி கொள்கையிலே இருக்கின்ற களங்கங்களை நான் சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது. நிலவிலே களங்கம் இருப்பதால் அதனுடைய நேர்த்தி கெட்டு விடுவதில்லை என்று வாதிக்கலாம். நிலவிலே களங்கம் இருக்கலாம். ஆனால் கல்வியிலே களங்கம் இருக்கக் கூடாது. அந்தக் காரணத்தினாலேதான் “கற்க கசடற..." என்று பெரியவர்கள் கூறினார்கள். "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என்று நம்முடைய நாட்டிலே பழமொழி வழங்கி வருகிறது. கண் எனத்தக்க எண்ணும் எழுத்தும் ஏறத்தாழ 15 ஆண்டுகாலக் காங்கிரஸ் ஆட்சியில் பல்வேறு முறைகளை