உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

394

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


உரை : 29


துணை மானியம்

நாள்: 28.3.1973

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவரவர்களே. இந்த இறுதித் துணை மானிய மதிப்பீடுகளில் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவரும் நிறைய கருத்துக்களை எடுத்துக் கூறியிருக்கிறார்கள். திரு. பொன்னப்ப நாடார் அவர்கள் குறிப் பிட்டதுபோல் கடைசியாக நேரத்தை நானும் அவருமாகத்தான் பங்கிட்டுக்கொள்ளுமளவிற்கு, இன்னும் பத்து நிமிஷத்திற்குள் என்னுடைய பேச்சை நான் முடிக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

பல கருத்துக்கள் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டன. குறிப்பாக நம்முடைய டாக்டர் ஹாண்டே அவர்களும் திருமதி அனந்தநாயகி அவர்களும் ஏலமெடுத்த மதுக்கடைக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களைப் பற்றியெல்லாம் மிக விளக்கமாக எடுத்துக் கூறியிருக்கிறார்கள். அவைகளை எந்த வகையில் பரிசீலிக்கலாம் என்பது குறித்தும் அரசு ஆராய முயலுமென்று தெரிவித்துக்கொள்கிறேன்.

று

இதன் தொடக்கத்திலேயே பாதிக்கப்பட்ட பல பேர் அரசுக்கு முறையீடுகள் அளித்தபோது வெளியேயிருந்த சில கட்சித் தலைவர்கள் கள்ளுக்கடைக்காரர்களுக்கு, ஏதோ அவர் களிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாயைப் பெற்றுக்கொண்டு சலுகைகளை அளிக்கப்பார்க்கின்றார்கள் என்பது போன்ற தவறானப் பிரசாரங்களை எல்லாம் செய்தார்கள். இப்பொழுது சுதந்திரா கட்சியினுடைய சார்பிலும், கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்கமணி அவர்களும், திருமதி அனந்தநாயகி அவர்களும் இப்பொழுது சொன்ன இந்தக் கருத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஏதாவது கருணை காட்டியாக வேண்டும். சில