உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

399


உரை : 30

நிதி ஒதுக்கீடு மசோதா

நாள்:29.3.1973

மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவர் அவர்களே, இந்த நிதி ஒதுக்கீடுபற்றி காங்கிரஸ் கட்சியி னுடைய தலைவர் அவர்களும், மற்றைய கட்சியினுடைய தலைவர்களும், மாண்புமிகு உறுப்பினர்களும் தங்களுடைய கருத்துக்களை நீண்ட நேரம் எடுத்துச் சொல்லியிருக் கிறார்கள்.

து

குறிப்பாகப் பல்வேறு மானியங்களைப்பற்றி விவாதித்து நிதி ஒதுக்கீடு பற்றிய கருத்துக்களை எடுத்துச்சொல்கிற நேரத் திலே, பொது விவாதத்திலேயும் மானியக் கோரிக்கை களிலேயும் எடுத்துச்சொல்ல விட்டுப்போன பல்வேறு பிரச்சினைகளை இந்த நாளிலே எடுத்துச்சொல்லப் பயன்படுத்திக்கொள்வது முறையாக இருந்து வந்திருக்கிறது. அந்த வகையில் பல விஷயங்கள் இங்கே எடுத்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. நான் அவை எல்லாவற்றிற்கும் தனித் தனியாக இப்பொழுது பதில் சொல்வது என்பது இயலாத காரியம். ஆனாலும் ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுடைய தொகுதியைப்பற்றியும் ங்களுடைய தொகுதியிலே நிறைவேற்றப்படவேண்டிய காரியங்களைப் பற்றியும் பொதுப்பணித்துறையிலேயும், வேறு துறைகளிலேயும், மருத்துவத் துறையிலேயும், கல்வித் துறையிலேயும், வேளாண்மைத்துறையிலேயும் நிறைவேற்றப் பட வேண்டிய காரியங்களை விளக்கமாக இங்கே எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். அவைகள் நிச்சயமாகக் குறிப்புப் புத்தகத்திலே இடம் பெற்றிருக்கும் என்ற அளவிலே அதிகாரிகள் வாயிலாக அவை கவனிக்கப்பெற்று ஏற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற உறுதியை மாத்திரம் இந்த மன்றத்திலே கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

ம்

பல