உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

407


களுக்குப் பிறகும் இதுவரை 7,500 பேர்களுக்கு வழங்கப் பட்டிருக்கிறது. இது குறைவானதல்ல.

ம்

அது மாத்திரமல்ல. ஐம்பது ரூபாயை எழுபத்தைந்து ரூபாயாக நாம் ஆக்கியிருக்கிறோம். அவர்கள் இன்னும் காலக்கெடு தேவை என்று சொன்னார்கள். மூன்று தடவை காலக்கெடு கொடுத்தாகி விட்டது. இதற்கு மேல் தருவது இயலாத ஒன்றாக இருக்கிறது. முதியோர் ஓய்வூதியத்தைப் மு பொறுத்தவரையில் 95 லட்ச ரூபாய் ஒதுக்கியது குறைவாகக்கூட இல்லை. ஆனால் 95 லட்ச ரூபாயில் 72 லட்சம் செலவாயிற் றென்றால் வருகிற மனுக்களின் அந்தத் தகுதியைப் பார்த்தால் சாதாரண முதியோராக இருந்தால் 65-க்கு மேற்பட்டு, அனாதையாக இருக்க வேண்டும். 65-க்கு மேற்பட்ட முதியோர் என்றால் கூன், குருடாக, தொழுநோய் உள்ள வியாதியஸ்தர் களாக இருக்கவேண்டும் என்ற தகுதிகள் 1962இல் நிர்ணயிக் கப்பட்டிருக்கின்றன. அந்தத் தகுதியின் அடிப்படையில்தான் அவைகளை ஆராய்கிறோம்.

மு

மின்சாரத்தைப் பற்றி வெகுவாகப் பேசப்பட்டது. டாக்டர் ஹாண்டே அவர்கள் சொன்னார்கள். குந்தா திட்டத்திற்கு கனடாவிலிருந்து ஏன் இயந்திரம் வரவழைக்கவில்லை என்று து கேட்டார்கள். நாம் வேறு நாடுகளிலிருந்து உதவி பெற வேண்டி யிருக்கிறது. மத்திய அரசு இந்த உதவியைப் பெற வேண்டி யிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இந்த இயந்திரங் களை வாங்கத் தயாராக இருந்தும்கூட மத்திய அரசு சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் கனடாவிலிருந்து வேண்டாம், அமெரிக்காவிலிருந்து வரவழைக்கலாம் என்ற அளவிற்கு யோசனைகள் செய்யப்பட்டு, பிறகு அது கைவிடப்பட்டு கனடாவிலிருந்து வரவழைக்கலாம் என்ற முடிவிற்கு வந்தார்கள். மத்திய அரசு மூலமாக அந்த இயந்திரம் சீக்கிரத்தில் நமக்குக் கிடைக்குமென்று நம்புகிறோம். அதைப்போலவே 5-வது ஜெனரேட்டர் எண்ணூரில் நிறுவ ஹைதராபாத்திலும், திருச்சி யிலும் உள்ள மத்திய அரசு நிறுவனங்களால் செய்யப்பட்டு வருகின்றன. விரைவிலே கிடைத்துவிடும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

ல்