உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

421


1965ஆம் ஆண்டு மாணவர்கள் மொழிப் புரட்சியிலே கலந்து கொண்டபோது பேரறிஞர் அண்ணா அவர்கள்- காலை ஒரு அறிக்கை, மாலை ஒரு அறிக்கை, மாணவர்களே வேகமாகச் செல்லுங்கள், துடிக்கும் ரத்தமே துவளாதீர்கள் என்றா அறிக்கை விட்டார்கள்? இல்லை. மாணவர்களே, அந்தப் பொறுப்பைப் புரிபவர்களிடம் விட்டுவிடுங்கள், நீங்கள் அமைதியோடிருங்கள் என்று பலமுறை அறிக்கை விடுத்து கடைசியாக அண்ணா அவர்கள் கொஞ்சம் ஆத்திரமாகவே கூட 'நான் சொல்வதைக் கேட்காதவர்கள் யாரானாலும் ம் அவர்கள் என் தம்பிகளல்ல’ என்று அழுத்தந்திருத்தமாக அறிவித்தார்கள்.

ஆனால், மாணவர்களுடைய கிளர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக அரசு உருவான பிறகு பல நேரங்களில் நடைபெற்றிருக்கிறது. தமிழ்நாட்டிலே இருக்கின்ற தனிப்பெருந் தலைவர்களிலே யாராவது மாணவர்கள் பிரச்சனையிலே தலையிட்டு மாணவர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக் கொண்டு அறிக்கை இடுவார்கள் என்று எதிர்பார்த்தேன். இந்தப் பாழும் மனம் எதிர்பார்த்தது தவறு என்பதை எடுத்துக் காட்டுகிற வகையிலே தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர்கள் நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை எண்ணியெண்ணி நான் வேதனைப்படுகிறேன்.

தமிழ்நாடு சட்டமன்றம்- நல்ல பாரம்பரியத்திற்கும் பாண்பாட்டிற்கும் வழிகாட்டக்கூடிய மன்றம்ஆகும். இங்கே 1966 ஆம் ஆண்டு வரையில் எத்தனையோ எதிர்க்கட்சிகள் இருந்திருக் கின்றன. 1966ஆம் ஆண்டு வரையில் இப்பொழுது சட்ட மன்றத்தில் நடைபெறுகிற விரும்பத்தகாத வேதனைப் படத்தக்க நிகழ்ச்சிகள் ஏதாவது நடைபெற்று இருக்கின்றனவா என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். எந்த எதிர்க் கட்சியையும் குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டுவதாகக் கருதக்கூடாது. நாம் மாணவர்களுடைய செயலை ஒவ்வொரு கட்டத்திலும் தடுத்து நிறுத்திட வேண்டும். மாணவர்கள் மொழிக்காக, நாட்டு விடு தலைக்காகப் போராட்டத்திலே ஈடுபடுவது வேறு. சிறு சிறு பிரச்சினைகளுக்காக ஈடுபடுவது வேறு.

6