உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

455


அந்தத் தொழிற்சாலை ஏறத்தாழ ரூ. 10 இலட்சத்திற்கு மேற்பட்ட தொகையில் அமையவிருக்கிறது. அந்தத் தொழிற்சாலையிலே ஊனமுற்றவர்கள் பயிற்சி பெறுவது மாத்திரமல்ல, அந்தப் பயிற்சி அவர்களுக்கு அளிக்கப்படுகிற நேரத்திலும், பயிற்சி பெற்றவர்கள் அங்கே பணியாற்றுகிற நேரத்திலும் அந்தத் தொழிற்சாலையிலிருந்து மற்ற தொழிற்சாலைகளுக்குப் பயன்படுகின்ற வகையில் பல உற்பத்திக் கருவிகளையும் அங்கே உருவாக்குவதற்கான அந்தச் சாதனமும் இன்றைக்குப் பொருத்தப்பட்டு இருக்கிறது.

அதைப்போலவே பிச்சைக்காரர் நல்வாழ்வு இல்லங்களில் மறுவாழ்வு இல்லங்களில்

இதுபோன்ற தொழிற்சாலைகள் உற்பத்தித் திறன் உடையவைகளாக அமைய வேண்டுமென்ற அடிப்படையில் பரனூரில் அன்னிய நாட்டு உறவோடு, அவர்களுடைய நல்ல உதவியோடு அளிக்கப்பட்ட தொழிற் கூடத்தை நம்முடைய இந்திய நாட்டுப் பிரதமர் அவர்கள் சென்ற தடவை வந்திருந்தபொழுது தொடங்கி வைத்தார்கள்.

அது மாத்திரமல்ல, அந்த இல்லங்களிலேயிருக்கிற தொழுநோய் கொண்ட பிச்சைக்காரர்கள், அவர்களால் இயன்ற அளவிற்குக் கைத்தொழிலிலே ஈடுபடுவதற்கும் பாய் முடைதல், நாற்காலிகள் செய்தல், துணி நெசவு செய்தல் ஆகிய இந்தக் காரியங்களிலே ஈடுபடுவதற்கும் அவர்களுக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. ஆகவே, சமூக நலத் திட்டங்கள் பாராட்டத்தக்க வேண்டியவை என்கின்ற வகையோடு மாத்திரமல்லாமல், இப்படிப்பட்டப் பொருளாதாரத் திட்டங்களோடு அவைகளை நாம் இன்றைக்கு இணைத்திருக்கிறோம்.

6

6

நம்முடைய அரசின் மிகப் பெரிய திட்டமாக இன்றைக்கு வசதி உருவெடுத்திருக்கிற தாழ்த்தப்பட்டோர் வீட்டு வாரியத்தினுடைய திட்டங்களைப்பற்றியும் இங்கே பேசப்பட்டது. நண்பர் குருசாமி அவர்கள் பேசும்போது, தாழ்த்தப்பட்டோர் வீட்டு வசதி வாரியத்தைப்பற்றிக் குறிப்பிட்டார். அவர்களுக்கு ரூ. 3,000 என்றும், ரூ. 3,500 என்றும் வீடுகளுக்காகத் தருகிறார்கள். அது போதாது என்று குறிப்பிட்டார். அதுவல்ல நிலைமை. அரிசன சகோதரர்களிடம் தனிப்பட்டு அப்படி ரூபாய்களை அளிப்பது கிடையாது. இந்த வாரியத்தின் சார்பில் கட்டப்படுகின்ற