பாடலுக்குத் தக்கவாறு நடித்துக் காட்டும்போது நாடகமாகவும் மாறி வளர்ந்துள்ளதைக் காணலாம். முழுக்க முழுக்கப் பாடலாகவே உருவான நாடகம் கால விருப்பை மதித்து உரை நடையில் உயர்வாக வளர்ந்து செழிப்பதை இன்று பார்க்கலாம். தொடர்புடைய * கலைகள் குறிப்பிட்ட சில கூறுகளைத் கிளைக் தங்களுக்குள் பரிமாறிப் புதுப்பெயரில் வேறுபட்ட கலைப்படைப்புகளை உருவாக்கியுள்ளதையும் காணலாம். பாடலாக அமைந்த இலக்கியக் கலை இன்று அமைப்பு, வெளியீட்டுமுறை போன்றவற்றில் வேறுபாடுகள் கொண்டு பலவித இலக்கிய வகைகளாகப்
காணலாம்.
கலைகளின் தோற்றம்
பலுகிப் பெருகியுள்ளதைக்
சில
கலைகள்
கலை உணர்வு மனிதனுக்கு இயல்பாகத் தோன்றும் தன்மை களில் ஒன்று என்பதைக் கண்டு உணரலாம். மனிதனின் இன்ப துன்ப உணர்வுகள் கலை வேறுபாட்டுக்கு ஒரு சிறந்த காரணமாக அமைகிறது. விளையாட்டு உணர்வு போலச் செய்யும் திறமையும் கலையை வளர்ப்பதற்கு உதவுகின்றன அச்ச உணர்வு பலவிதமான கற்பனைகளுக்கும் நம்பிக்கை களுக்கும் இடம் வகுத்து அதன் பயனாகச் தோன்றி வளர்ந்துள்ளன. இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த மனிதன் அதன் இயல்புகளைக் கூர்ந்து நோக்கி அவற்றுடன் தன்னுடைய உணர்வுகளைக் கலந்து திறமையாகச் செயல் உருவாக்கம் செய்து சில கலைகளைத் தோற்றுவித்திருக்கிறான். அறிவுத் திறனால் செயலாக்கம் பெற்று கலைகள் சிறப்புடன் வளர்ந்து படர்ந்துள்ளன. சுவைஞனின் ஆவலும் வியப்பு கலந்த பாராட்டும் கலைஞனின் அரிய திறமைகள் பெருமையுடன் வெளிப்படுத்தப் பெறுவதற்கு வழிவகுத்துக் கொடுக்கின்றன. ஊக்கமின்றி உயர்வு இல்லை.உயர்வு இன்றி சிறப்பில்லை கலைகள் உணர்வில் தோன்றி ஊக்கத்தில் வளர்ந்து திறமையில் சிறந்து காலவேகத்தில் கனிந்து இனிய பண்பாட்டுச் செல்வங் களாக நிலைபேறடைகின்றன.
நாட்டுப்புறக் கலைகள்
மனிதனின் இயற்கையான வாழ்வில் இயல்பாகத் தோன்றி
விதிமுறை வகுப்பின்றி எளிமையாக வளர்ந்து உண்மையான உணர்ச்சிகளின் உறைவிடமாகப் பாமர மக்களைக் கவர்ந்து களிப்படையச் செய்யும் இனிய கலைகளை நாட்டுப்புறக்