உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




47

பிணத்தை முற்றத்தில் ஒரு பாயில் கிடத்தி வைத்து அதைச் சுற்றிப் பெண்கள் வருவர். பாடல்களில் பல குறிப்புகள் தோன்றுகின்றன.

'போரஞ்சான் தேவியும் பிள்ளைகளும்

பூவடியைச் சுற்றி வந்தார்

வாள்விசயன் தேவியும் மக்களும்

மலரடியைச் சுற்றி வந்தார்

பிந்தி வந்ததினால் பின்னிப்பாய் சுத்தி வந்தேன் பூவடியைச் சுத்தி வந்தேன்

பறந்து வந்ததினால் வண்ணப்பாய் சுத்தி வந்தேன் -மலரடியைச் சுத்தி வந்தேன்’10

சுடலையில் தீப்பற்றி எரிவதைப் பற்றியும் பாடல் உள்ளது. அனைத்துப் பொருளும் இசையும் நிறைந்து காணப்படுகின்றன. தீப்பற்றும் காட்சியை ஒரு பாடலில் காணலாம்.

'காடு மணமணக்கக் கண்டாங்கி தீப்பறக்க செடியோ மணமணக்கச் சித்தாடை தீப்பறக்க பூவோ மணமணக்கப் பூவாடை தீப்பறக்க'11

கலை

என்று பாடிக் காட்டுகின்றனர். துன்பக் காட்சிகளையும் மெருகுடன் காணும் நாட்டுப்புற மக்களின் கலைத்தன்மையைப் பெருமையாகவே கொள்ள வேண்டும். எத்தகைய மன உணர்ச்சி யையும் கலைச் சிறப்புடன் வெளியிடும் திறன் தமிழர்களுக்கு இருந்துள்ளதைக் காட்டும் சிறந்த சான்றுகளாக இந்தப் பாடல்கள் விளங்குகின்றன. துன்பத் தோய்வுகளான பாடல்கள் மனித மனத்தைக் கவர்ந்து உணர்ச்சியைத் தூண்டும் இயல்பை உடையனவாக உள்ளன. பாடலில் புகுத்தப் பெற்றுள்ள உணர்ச்சி பாடுவோரையும் கேட்போரையும் பற்றிக் கொள் வதில்தான் இவற்றின் கலைத்தன்மை உண்மையாக விளங்கு கிறது. அவை துன்பக் கேணியாக அமைந்து பாடுவோருக்குத் துன்பத் துடைப்பாகப் பயன்பட்டுவிடுவதையும் அறிய வேண்டும். உள்ளத்தில் அமுங்கியழுத்தும் துயரை வெளியேற வைப்பதினால் மனம் ஆறுதலடைய வழி திறந்து விடுகிறது. பூப்பெய்தல் கொண்டாட்டம்

பெண்கள் பூப்பெய்தல் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு முக்கியமான பருவநிலையாகும். அத்தகைய நிலையை அவள்

(10) மேற்படி. (11) மேற்படி.