139
படுகின்றன. அட்டைத் தாளிலும் பாவைகளைச் செய்து சிலர் கூத்து நடத்துவர். ஆடு அல்லது மானின் தோல்களை அங்குலக் கனத்தில் பயன் படுத்துவது மிகவும் சிறப்பாகும். தலை. கண்டம், கை, கால் ஆகியவற்றிற்குத் தனித்தனித் துண்டுகளைப் பயன்படுத்தி நூலினால் கட்டுவது பாவைகளின் பொருத்தமான நடிப்பிற்குப் பெரிதும் உதவும். பலவிதமாகத் துளைகளிட்டு அணிகள் பூண்டிருப்பது போன்று காட்டுவர். இரசாயன முறையில் பாவைகளுக்கு வண்ணம் திட்டுவர். பாவைகள் ஒன்றரை அடியிலிருந்து இரண்டடி வரை நீள முடையவைகளாக இருப்பது நலம்.
பாவைக் கூத்தாடும் குழுவில் மூன்று முதல் ஆறு கலைஞர் வரை. இருப்பர். பாவைகளை இருவர் ஆட்டுவர். இருவர் பாடுவர். ஒரு பெண்ணும் துணையாக இருப்பாள். ஒரு துணைப் பாடகரும் உதவுவார். ஜலராவும், மரத்தால் செய்யப்பட்ட தாளக்கட்டைகளும் இருக்கும். சிலர் தபேலா அடித்து இசை கூட்டுவதும் உண்டு. பாவைக் கூத்து முன்பு மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட புகழ் வாய்ந்த கலையாக விளங்கியது. இப் பொழுது சிற்றூர்களில் ஓலையரங்குகளில் மிக எளிய முறையில் நடத்தப் படுவதையே பார்க்க முடிகிறது. கலையரங்கின் முன் பக்கம் ஒரு வெள்ளைத் திரை கட்டப் பட்டிருக்கும். உள்ளே ஒரு விளக்கைத் தொங்க விட்டிருப்பர். விளக்குக்கும் திரைக்கும் டையில் பாவைகள் இயக்கப்படும்.
படங்களை ஒரு கொம்புடன் கட்டியிணைத்து ஆட்டுவது வசதியாக இருக்கும். மரப்பாவைகளை நூலினால் கட்டி ஆட்டுவதுதான் முறை. பாவையை ஆட்டும் கலைஞரைச் சூத்திரதாரி என்று கூறுவர். அவர் காலில் கட்டைச் செருப்பு களை அணிந்து ஒரு பலகையின் மீது அடித்து பலவிதமான தாள ஒலிகளையும் உணர்ச்சி ஒலிகளையும் எழுப்புவார். அம்பு வீசுதல், கைகொண்டு குத்தல், கீழே விழல் ஆகியவற்றைத் தடார் ஒலியின் வாயிலாகக் காட்டுவார். பலபல குரலில் பேசும் பாத்திர வேறுபாட்டைப் புலப்படுத்துவார். பாடல் களைப் பாடி, உரையாடல்களைப் புலப்படுத்திக் காட்டுவதில் அவர் மிகத் திறமையுடையவராக இருந்தால்தான் கலை சிறக்கும்.
நாட்டுப்புறத்தில் ஒரு பொது இடத்திலோ அல்லது ஊர்த் தலைவரின் வீட்டு முன்போ இக்கூத்து நடத்தப்படும். சில இடங்களில் ஊரார் மொத்தமாகப் பணத்தைப் பிரித்துக்