பாவைக் கூத்துக்களில்
141
பாவைகளின் வாயிதழ்கள் அசையும் முறை உண்டு. இராஜஸ்தானத்தின் முறை வேறாக உள்ளது. அங்கு பாவைகள் சிறி தாகக் காணப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் கொட்டாரம் கோபாலராவும் ஏழு சாட்டுப்பத்து செல்லையா நாடாரும் பாவைக் கூத்துக் கலையில் வல்லவர்கள். ஊர்த்திருவிழாக்கள் நடக்கும்போதும், வளர் பிறையாக இருக்கும் காலங்களிலும் பாவைக் கூத்தை
நடத்துவர்.
மேனாடுகளிலும் பாவைக் கூத்துக் கலை சிறிது வேறுபட்ட அமைப்புகளுடன் நடத்தப்படுகிறது. இங்கிலாந்திலும் அமெரிக் காவிலும் சிறுவர் நிகழ்ச்சியாகக் காட்டப்பெறுகிறது. கீழை நாடுகளான சைனா, இந்தோனேசியா, ஸ்ரீலங்கா ஆகியவற்றி லும் இக்கலைக்குச் சிறப்பு உள்ளது. சைனாவில் 1953 ஆம் ஆண்டில் பாவைக் கூத்து அரங்கம் அரசாங்கத்தால் கட்டப் பெற்று அதில் அரசின் ஆதரவுடன் இந்தக் கூத்து கலைச் சிறப்புடன் நடத்தப்பட்டு வருகிறது. பத்தாம் நூற்றாண்டி லிருந்தே ஜாவாவில் நடைபெற்று வந்த பாவைக் கூத்து இப்பொழுது புகழ் மங்கிக் காணப்படுகிறது. ஸ்ரீலங்காவில் மூன்று முதல் நான்கு அடி உயரமுள்ள பாவைகளைப் படுத்துகின்றனர். அரங்கமும் மிகச் சிறப்பாகவும் வசதியாகவும் அமைக்கப்பட்டுள்ளது.
பயன்
இந்தியாவின் தென்பகுதி நாடுகளான ஆந்திரபிரதேசம், கர்நாடகம். தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் இன்றும் பாவைக் கூத்து புகழ் பெற்று மிகச்சிறப்பாக நடைபெறுவதைக் காணலாம். பாவைகளில் இடத்துக்கு இடம் பலவகை மாற்றங் கள் இருப்பதைக் காண முடிகிறது. ஆந்திரபிரதேசப் பாவை களில் நல்ல பாத்திரங்களும் தீய பாத்திரங்களும் ஒன்றுபோல் தோன்றுகின்றன. இராமனும் இந்திரஜித்தும் பார்வைக்கு வேறுபாடில்லாத பாவைகளாகவே காணப்படுகின்றனர். தமிழ் நாட்டில் சகுனி, இராவணன், சூர்பநகை, கடோத்கஜன் முதலிய தீயவர்களின் பாவைகள் கோரவுருவத்துடனும் கோரைப் பல்லு டனும் தோன்றுகின்றனர். பார்த்தவுடன் வேறுபாடு அறியத் தக்க முறையில் இவை வரையப்பட்டுள்ளன. பாவைக் கூத்து தொன்மக் கதைகளைக் கலையுணர்வுடன் வளர்ப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளது.