உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




காமண்டி கொளுத்தல்

142

திருச்சி, தென் ஆர்க்காடு, தஞ்சை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் காமண்டி கொளுத்தல் ஒரு சிறப்பான கலை நிகழ்ச்சியாக நடத்தப் படுகிறது. குறிப்பாகத் திருச்சியில் அதன் பெருமை கூறத் தக்கதாய் உள்ளது. விழாக்காலங்களில் இது நடைபெறுகிறது. சிவபெருமான் காமனைத் தன் நெற்றிக் கண்ணைத் திறந்து எரித்த காட்சியை விரிவாக நடித்துக் காட்டு கின்றனர். இதற்கென்று கலைக் குழுவோ அரங்கமோ கிடையாது. நாட்டுப்புற மக்கள் தங்களுக்குள்ளே எரிந்த கட்சி, எரியாத கட்சி என இரு பிரிவுகளை ஏற்படுத்தி வேடமிட்டு வாதிட்டவாறு நடித்துக் காட்டுவார்கள். காமன் ஆடிக் கொளுத்தப்படுதலே காமண்டி கொளுத்தலாக மாறியிருக்க வேண்டும். காமன் பண்டிகை 'காமண்டியாகி' இருக்குமா என்பதையும் சிந்திக்கலாம்.

காமன், ரதி ஆகியோர் இதிலுள்ள முக்கியமான பாத்திரங் கள். ஊர் மக்கள் இரு கூறாகப் பிரிந்து காமனைக் கொளுத்துவது முறையென்றும் முறையில்லை என்றும் பல காரணங்களைக் கூறி வாதமிடுவர். இது மூன்று அல்லது நான்கு நாட்கள் வரை சுவையாக நடக்கும். இறுதியில் காமனின் உருவத்தைச் செய்து ஊர்வலமாகக் கொண்டு சென்று ஊர் புறத்தில் தீவைத்துக் கொளுத்தி விடுவர் வாதம் சூடேறிவிடுவதும் உண்டு. இந்த நிகழ்ச்சியில் கலந்து நடிப்பவர்கள் வீட்டுக்கு வீடு பணம் பிரிப் பதும் உண்டு. இக் கூத்தைச் சில இடங்களில் ‘மன்மதன் கூத்து என்ற பெயருடன் சிலவித மாற்றங்கள் செய்து நடித்துக் காட்டு வதையும் காணலாம்.

உறியடித்தல்

கண்ணன் ஆயர்பாடியில் வெண்ணெய் திருடுவதைச் சித்திரிக்கும் காட்சியாக 'உறியடித்தல்' பல மாவட்டங்களில் நடைபெறுகிறது. குமரி மாவட்டத்தில் திக்கணங்கோடு முதலிய வடபகுதி ஊர்களிலும் செங்கல்பட்டு மாவட்டத்தில் சில ஊர்களிலும் உறியடித்தல் மிக முக்கிய விழா நிகழ்ச்சியாக நடப்பதைக் காண முடியும். வட ஆர்க்காடு மாவட்டத்தில் திரௌபதியம்மன், தருமராஜா கோயில்களில் விழா நடக்கும் போது இக்காட்சி நடித்துக் காட்டப்படுகிறது. பத்து நாட்கள் நடக்கும் விழாவில் ஒரு நாள் தீமிதியும், ஒருநாள் உறியடித்தலும் நடைபெறுகின்றன. தென்மாவட்டத்தில் நடப்பதற்கும் இதற்கு