147
களாக மதித்துப் போற்றுவர். அவர்களின் வீர வரலாறுகளை விளக்கமாகக் கேட்க ஆவல்படுவது இயல்பே. ஆகையினால் ஆலய விழாக்களில் அவற்றை ஒருவர் படிக்கவும் இன்னொருவர் விளக்கவும் கேட்டு இன்புறுகின்றனர். இதனைக் 'கதை சொல்லல்' என்று நாட்டுப்புறங்களில் கூறுகின்றனர்.
தென் ஆர்க்காடு, வட ஆர்க்காடு, செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் திரௌபதியம்மன், தருமராஜா கோயில்கள் மிகுதியாக உள்ளன. அவற்றில் பாரதக் கதை படித்தல் முக்கிய நிகழ்ச்சியாக அமைகிறது. ஒருவர் பாடல்களை இசையுடன் பாடுவர். இன்னொருவர் அவற்றை விளக்கிக் கதை கூறுவர். பாடுவதில் இனிமையும் விளக்குவதில் அறிவும் உள்ளன. இரண்டையும் இணையாக நாட்டுப்புற மக்கள் சுவைத்து மகிழ் கிறார்கள். பாடுபவர் இனிய குரலும் இசைத்திறனும் உடைய வராக இருக்கவேண்டும். விளக்குபவர் நன்றாகக் கதையைத் தெரிந்து கருத்துக்களை விளக்கியுரைக்கும் அறிவுத்திறனும் சொல்லாற்றலும் உடையவராக இருக்க வேண்டும். இக் கலையில் சொல்லுவதற்கு முதலிடமும் சிறப்பும் இருப்பதினால் இதைக் 'கதை சொல்லல்' என்று அழைத்திருக்கிறார்கள். சொல்லுவது அறிவுரையல்ல கதையே என்ற முக்கிய குறிப்பும் உள்ளது. இருப்பினும் வாழ்வுக்கு வேண்டிய அறிவுரைகளும் சுவைப்பதற்கு இனிய நகைச் சுவையும் இடையிடையே இடம் பெறுவதைக் காணலாம்.
பாதிரிக்குப்பம் (தென் ஆர்க்காடு) ரெட்டிக் குப்பம் (வட ஆர்க்காடு) ஆலந்தூர் (செங்கல்பட்டு) போன்ற ஊர்களில் பாரதம் சொல்லல் மிகச் சிறப்பாக நடப்பதை அறியலாம். பதினெட்டு நாட்கள் தொடர்ந்து மாலையில் கதை சொல்லப் படும். இதைத் திரளான மக்கள் தினமும் கேட்டு மகிழ்வது வழக்கமாக உள்ளது. இரகுநாத சமுத்திரம் பரசுராமன் கதை சொல்வது மிகச் சிறப்பாக இருப்பதை இன்றும் காணலாம். கதை சொல்வதைப் புனிதமாகக் கருதி நோன்பு காப்பது வழக்கம். வீட்டுக்கு வராமல் கோயில் கூடாரத்தில் அமர்ந்தே நோன்பு
காப்பார்கள்.
திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளில் பாரதம் படிப்பதுடன் சில இடங்களில் இராமாயணமும் வாசித்து விளக்கம் சொல்லப் படுகிறது. குமரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இத்தகைய கதை சொல்லல் குறைவாக உள்ளது. ஆயினும் முன்னாளி லிருந்து வழக்கத்தில் இருந்ததாக அறிய முடிகிறது. சென்ற