உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




158

நொண்டி நாடகம் வழி காட்டுகிறது.

இன்பச்சுவை, நகைச் சுவை மிகுந்து காணப்படுவதினால் மக்கள் இத்தகைய நாடகங் களைச் சிரித்து சிரித்து வயிறு குலுங்கக் கண்டு களித்திருப்பர்.

நொண்டி நாடகம் ஒரே ஒரு பாத்திரத்தை உடையது. அவன் காலிழந்த நொண்டியாக மேடையில் தோன்றுவான்.

அவற்றிற்குத்

தானே தன்னுடைய தீய வாழ்வைப் பாடலாகப் பாடி தக்கவாறு ஆடுவான். அவன் நொண்டியாக நின்று ஆடுவது வேடிக்கையாகவும் வினோதமாகவும் இருக்கும். கால் வெட்டப்பட்டது போன்று ஒருகாலை மடித்துக்கட்டி அதன் மேல் சிவப்பு வண்ணம்பூசி ஒருவன் நடிப்பதாகக் கூறுகின்றனர். இத்தகைய ஆடல் நாடகம் கோயில் விழாக்களிலும் அரசன் முன்பும் சுவையாக நடைபெறும். பெரும்பாலும் ஒரு அரசன் அல்லது ஒரு கடவுள் இந்த நாடகத்தில் போற்றப்படுவதை இந்த நாடகத்தில் பார்க்கலாம்.

விளக்கம் ஒரு தீய

நொண்டி நாடகத்தின் பொருள் இளைஞனின் வரலாறாக. அமையும். நொண்டி அதனை விளக்கிப் பாடுவதை மக்கள் சுவைத்துக் காண்பர். ஒரு மணமாகாத வாலிபர் தாய் தந்தையரின் அறிவுரைக்கு அடங்காது ஆணவம் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறிச் செல்கிறான். அவன் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு பணம் திரட்டி வாழ்கிறான். காம நாட்டம் கொண்டு பரத்தையருடன் உறவு கொள்கிறான். கைப்பொருள். தீர்ந்து வறியவனாகித் துரத்தப்படுகிறான். தெருவில் நின்று பரத்தையரைப் பழித்துப் பேசுகிறான். தன்னை நொந்து கூறுகிறான். இன்னும் பணம் தேட விரும்புகிறான்.

ஒரு அரசனுடை ய அரண்மனைக்குப் பதுங்கிச் சென்று மறைந்து கொள்கிறான். இரவில் அரசனின் குதிரையைக் களவாட முயலும்போது கையும் மெய்யுமாய் பிடிபடுகிறான். காவலர் அவனைத் திருட்டுக் குற்றம் சாட்டி அரசனுக்கு முன்னால் நிறுத்துகின்றனர். அரசன் வெகுண்டு நோக்கி அவனைக் கை வேறு கால் வேறாக வெட்டிவிடுமாறு ஆணை யிடுகிறான்.

ஆணை நிறைவேற்றப்படுகிறது. திருடன் வலி தாங்காது கூக்குரலிடுகிறான். இரங்குவாரின்றித் தவிக்கிறான். பெற்ற தாய் தந்தையரை நினைக்கிறான். இறைவனை வேண்டிப் பாடுகிறான். முன்பு செய்த தீய செயல்களை ஒவ்வொன்றாகக்