உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

தவறான முறையில் பலரிடத்தில் குவிந்திருக்குமானால் அவற்றைப் பெற்று, நிலம் அவர்களுக்கு வழங்குகிற காரியத்தைச் சட்டபூர்வமாகச் செய்யவேண்டுமென்பதுதான் அரசாங்கத்தின் கொள்கை. இது திரு. பொன்னப்ப நாடார் அவர்களுக்கும் நன்றாகத் தெரியும் என்று கருதுகிறேன்.

இதில் முன்கூட்டி பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். நிலப்பறி இயக்கம் எந்த எந்த நாட்களில் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததோ அதற்கும் முந்தியே அந்த இயக்கம் நடைபெறாதவாறு தடுக்கப் பலர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட நடவடிக்கை எடுத்துக்கொண்டது பற்றி காங்கிரஸ் தரப்பு நண்பர்கள் என்ன கருதுகிறார்கள் என்று பார்த்தேன். நண்பர் திரு. சித்தன் அவர்கள் the failure of Government to deal with land grate problem in the state - என்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்த நிலப்பறி இயக்கத்தைச் தடுத்து நிறுத்துவதிலே அரசு தவறிவிட்டது. நடவடிக்கை எடுப்பதில் இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்பது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் திரு. சித்தன் அவர்களுடைய குறிக்கோளாகும். நான் இந்த நிலப்பறி இயக்கம் நடத்தப்படுவதாக அறிவிக்கப் பட்டிருந்த நிலங்களின் உடைமையாளர் பூண்டி வாண்டையார் அவர்களுக்கும், குன்னியூர் ஐயர் அவர்களுக்கும் மற்றும் எல்லாக் கட்சிகளிலும் உள்ள நிலஉடைமையாளர்கள் அவர்களுக்கும் மாண்புமிகு உறுப்பினர் திரு. சித்தன் தந்திருக்கிற கருத்தை அர்ப்பணிப்பதைத் தவிர வேறு வழியில்லை.

இந்த நிலப்பறி இயக்கத்திற்காகத் தீட்டப்பட்ட திட்டங்கள் என்ன என்ன, இது எவ்வாறு நடைபெறுவதாக இருந்தது என்பதை நான் இந்த இடத்தில் இப்போது உங்களிடத்தில் கூறுவது பொருத்தமுடையதாகும் என்று கருதுகிறேன்.

தஞ்சாவூர் மாவட்டம், மன்னார்குடியில் 1970, மே திங்கள் 21-ம் நாளிலிருந்து 24-ம் நாள் வரையில் கூடிய இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு, கீழ்க்காணும் செயல் திட்டத்தை மேற்கொள்வதாக முடிவு செய்தது

(அ) 1-7-90-ல் ஊர்வலங்கள் நடத்தியும் வருவாய்த்துறை அலுவலகங்கள் முன்பாக ஆர்ப்பாட்டங்கள் செய்தும் பின்னர்