உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

65

நாங்கள் அதை அவமானமாகக் கருதுகிறோம் என்று கூறுவது தேசியக் கொடிக்கு அவர் தருகின்ற மதிப்புக் குறைவான வார்த்தை என்று கருதுகிறேன். அந்தக் கருத்திலே அவர்கள் சொல்லி இருக்கமாட்டார்கள்.

நாங்கள் கொடியைப் போட்டுக்கொண்டு போனபோது குழப்பம் ஏற்பட்டதுண்டு. மூதறிஞர் ராஜாஜி அவர்கள், "தேசியக் கொடி இதுதான் என்று சொல்லிவிடுங்கள். காங்கிரஸ்காரர்களே உங்கள் கட்சிக்கொடியை மாற்றுங்கள், இல்லாவிட்டால் எது தேசியக் கொடி, எது கட்சிக்கொடி என்ற குழப்பம் இருக்கிறது” என்று சொன்னார்கள். எத்தனையோ கிராமங்களில் சில காங்கிரஸ் காரார்கள் இராட்டை போடப்பட்டிருப்பது காங்கிரஸ்கொடி, அசோகச் சக்கரம் போடப்பட்டிருப்பது தேசியக்கொடி என்ற இந்த வித்தியாசத்தைக்கூட உணராமல் அசோகச் சக்கரம் போடப் பட்ட கொடியைக் கட்சிக் கொடியாக ஏற்றிவைத்த காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். சில காலங்களில் நாங்கள் போகிற நேரத்திலே மாலைகளை வைத்துக்கொண்டு இருக்கிறவர்கள் எங்களைப் பார்த்து காங்கிரஸ்காரர்கள் வருகிறார்கள் என்று நினைத்துக் கொண்டு பின்னால் தள்ளிப்போய் விடுகிறார்கள். ஆகவே அந்தக் காரியத்திற்காக அல்ல நாங்கள் தனிக்கொடி கேட்பது. அப்படியிருந்தால் வெள்ளைக் கொடியிலே அரசாங்கத்தின் சின்னம் போதும் என்று எண்ணியிருப்போம். இந்தக் கொடியிலே தேசிய கொடியும் நம் அரசாங்கத்தினுடைய கோபுரச் சின்னமும் இருக்க வேண்டுமென்றுதான் இரண்டையும் சம அளவில் வைத்து இரு பிரிவுகளாக வைத்துக் காட்டியிருக்கிறோம்.

ராஜபாளையத்திலே ஒரு நிகழ்ச்சி நடந்திருப்பதாக நான் பத்திரிகையிலே பார்த்தேன். அதைப்பற்றிக் காவலர் நடவடிக்கை எடுப்பார்கள். தனிக்கொடி பற்றிப் போட்டு, தேசியக் கொடியை ஒரு பக்கத்திலே போட்டு, கோபுரத்தை ஒரு பக்கத்திலே போட்டு, ஒரு நாயையும் போட்டு காங்கிரஸ்காரர்கள் வைத்திருக்கிறார்கள் என்று தினமலர் பத்திரிகையிலே வந்ததை நான் மதுரையிலே பார்த்தேன். என்னிடம் அதைப்பற்றிக் கேட்டார்கள். தேசியக் கொடி சின்னம், கோபுரச் சின்னம், இரண்டையும் போட்டவர்கள் தன்னுடைய படத்தையும் அதிலே போட்டுக்கொண்டார்களோ என்னவோ என்று சொன்னேன்! இப்படியெல்லாம் செய்வது