உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

63

இந்தியாவினுடைய ஒருமைப்பாட்டுக்குட்பட்டு, இந்தியாவினுடைய ஒற்றுமையைப் பலவீனப்படுத்தாத அளவிலேதான், மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் கேட்கிறோம். மாநில சுயாட்சித் தத்துவத்தை முன் வைக்கிறோம் என்று கூறி வந்திருக்கிறோம்.

இன்றைக்கு நாம் கேட்கிற தனிக் கொடியை அதோடு இணைத்து மாநில சுயாட்சி, தனியாட்சிதான், தனிநாடு கோரிக்கை தான் என்று வாதிடுவது விந்தையாக இருக்கிறது; நான் இடை மறித்துப் பேசுகின்றபொழுது சொன்னேன். கவர்னர் அவர் களுக்கு தனிக் கொடி இருக்கிறது. ஜனாதிபதி அவர்களுக்கு தனிக் கொடி இருக்கிறது. சென்னை மேயருக்குத் தனிக் கொடி இருக்கிறது. மாநில அளவிலே அமைச்சர்களுக்கும் தனிக்கொடி இருப்பதாலே எந்தத் தவறும் இல்லை என்பதுதான் என்னுடைய கருத்தாகும். நான் முதலிலே மாநிலத்திற்குத் தனிக்கொடிதான் கேட்டேன் என்றும், இந்திரா காந்தி அம்மையாரிடத்திலே அட்ஜஸ்ட் செய்து மந்திரிகளுடைய வீடுகளுக்கும் கார்களுக்கும் மட்டும் அது இருந்தால் போதும் என்று கூறிவிட்டதாகவும், எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சொன்னார்கள். ஜூன் மாதத்திலேயே எழுதிய கடிதத்திலே அமைச்சர்களுடைய வீடுகளுக்கும் கார்களுக்கும் ஒரு தனிக் கொடி வேண்டுமென்ற அளவிலேதான் கேட்கப்பட்டிருக்கிறது? இந்த வண்ணத்திலே இந்த வடிவத்திலே ஒரு கொடி இருக்க வேண்டும் என்றுதான் எழுதிக்கேட்கப்பட்டதே தவிர வேறு ஒன்றும் இல்லை.

உங்கள் அளவிலேயே கொடி எப்படி இருக்க வேண்டு மென்று சொல்லியிருக்கிறீர்கள், கொடியினுடைய வடிவத்தைச் சொல்லிவிட்டு, கொடியினுடைய வண்ணத்தைச் சொல்லிவிட்டு எதற்காக சட்டமன்றத்திலே கொண்டுவர வேண்டுமென்று அவர்கள் கேட்டார்கள். கொடி என்றால் அதற்கு எத்தனையோ விதிமுறைகள் இருக்கின்றன. பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் தேசியக் கொடியை இந்த நாட்டிற்கு அறிமுகப்படுத்தியபொழுது அந்தக் கொடியை எந்த நேரம் பறக்கவிடவேண்டும், எந்த எந்த நேரத்தில் கொடி இருக்கலாம், எந்த நேரத்திற்குள் அந்தக்கொடி இறக்கப்படவேண்டும், எந்த எந்த விழாக்களிலே பறக்கவிடப்பட வேண்டும், துக்க காலத்தில் எத்தனை எத்தனை நாட்களுக்கு,