உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

69

தியாகராயநகரில் சிவா-விஷ்ணு ஆலயம் என்ற ஓர் ஆலயம் இருக்கிறது. இந்தப் பிரமுகர் அந்த ஆலயத்தின் நிர்வாகக்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் ஒருநாள் திடீரென்று ஒரு நோட்டீஸ் போட்டு பக்தர்களை அழைத்து ஒரு விஷயத்தைச் சொன்னார். 'இரவு என்னுடைய கனவில் சிவா, விஷ்ணு இருவரும் வந்து இந்த ஆலயத்தில் ஐயப்பசாமியை வைத்துக் கோயில் கட்டிக் கும்பாபிஷேகம் செய்யவேண்டும்' என்று கூறியதாகக் கூறிக் கும்பாபிஷேகத்திற்காக நிதி திரட்டும் முயற்சிகளையும் மேற்கொண்டு, அதற்கான காரியங்களில் அந்தப் பிரமுகர் ஈடுபட்டார்.

உடனடியாக, அந்தக் கோயிலின்பால் அன்பு கொண்ட வரும், ஆத்திகருமான அண்ணங்காராச்சாரியார் ஒரு அறிக்கை விட்டார். அந்தப் பெரியவர் விட்ட துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிட்டது

"சாஸ்திரத்திலே ஏற்கனவே உள்ள ஒரு பழைய ஆலயத்தில் வேறு எந்தப் புதிய தேவதையையும் பிரதிஷ்டை செய்யக்கூடாது என்ற ஒரு திட்டமான சட்டம் இருக்கிறது. ஆகவே, இதுபோல் மகத்துவம் வாய்ந்த ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆலயக் கமிட்டியாருக்கோ அல்லது ஜெனரல் பாடிக்கோ எந்தவிதமான உரிமையும் கிடையாது. ஆலயம் சரிவர நடந்து வருவதை மேற்பார்வையிடுவதுதான் அவர்களின் அலுவலே அன்றி இவ்விஷயத்தில் தலையிட அவர்களுக்குத் தகுதி கிடையாது. இப்பிரச்சினையைத் தெளிவாகத் தீர்க்க ஆகம சாஸ்திரத்திலே பாண்டித்யமுள்ள பல வித்வான்களின் முடிவே சிறந்தது. . . . . . ஆகவே, மேற்கண்டவாறு ஒவ்வொருவரும் தான் கனவில் கண்டவற்றையெல்லாம் நம் ஆலயத்துக்குள் புகுத்த எண்ணினால் அதற்கு முடிவில்லாமற் போவதோடு ஆலயம் ஆலயமாகவும் இருக்காது”.

என்று அண்ணங்காராச்சாரியார் விடுத்த அறிக்கையில் குறிப்பிட் டிருக்கிறார்.

மேலும், அண்ணங்காராச்சாரியார் தனது துண்டுப் பிரசுரத்தில், காஞ்சி ஜகத்குரு ஸ்ரீ சங்கராச்சாரியார் சாஸ்தாவைப்