உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவர் அவர்களே, அந்த வேண்டுகோளைத்தான் எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் எடுத்துச்சொன்னேன். டாக்டர் ஹாண்டே அவர்கள் இந்தத் தேர்தலின் போது நான் நடவடிக்கை எடுக்கவில்லை என்று சொன்னார்கள். உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லுகிறேன். சேரன்மாதேவி சட்டப்பேரவை உறுப்பினர் அங்குள்ள சூழ்நிலையை எடுத்துச் சொன்ன நேரத்திலே நான் உடனே தொலைபேசி மூலமாக அங்குள்ள அதிகாரிகளோடு தொடர்பு கொண்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அது சம்பந்தமாக 3 பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆகவே, அரசு பாரபட்சமற்ற முறையிலே எல்லா நடவடிக்கைகளையும் எடுக்கும் என்று கூறிக்கொள்கிறேன்.