கலைஞரின் சட்டமன்ற உரைகள்
89
பற்றியும், அவர்களுடைய ஜாதியைப் பற்றியும், குறிப்பாக என்னைப் பற்றியும், என் ஜாதியைப் பற்றியும் எந்த அளவுக்குக் கீழ்த்தரமாகப் பேசிவருகிறார்கள் என்பதை நான் அறிவேன். ஆனாலும் இங்கே குறிப்பிடப்பட்ட கருத்துக்களைப் பற்றி காவல் துறையினர் எந்த அளவுக்கு நடவடிக்கை எடுத்திருக் கிறார்கள் என்பதை, அவர்கள் இந்தப் பிரச்சனையை எழுப்பி யுள்ள காரணத்தால் இங்கே வைப்பது பொருத்தம் என்று கருதுகிறேன்.
சென்னை மேயர் கலந்து கொண்ட ஒரு பொதுக்கூட்டத் தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கல் வீசி யிருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் கட்சி என்று நான் சொல்லும்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலே உள்ள அத்தனைபேரையும் குறிப்பிடுவதாகத் தவறாக எடுத்துக்கொள்ளக் கூடாது. திரு.சுப்பு போன்ற கம்யூனிஸ்ட் கட்சியினரைக் குறிப்பிடுகிறேன்.
திரு.கே.டி.கே.தங்கமணி: சுப்பு கட்சி என்று தனியாக ஒரு கட்சி கிடையாது. எல்லாம் ஒரே கட்சிதான்.
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: சேர்ந்துக்
கொள்வதாக இருந்தால் நான் வருத்தப்படவில்லை. கூட்டத்திலே கலவரம் செய்து, கல்வீசி, சென்னை மேயரின் மீது கல் வீசியதன் தொடர்பாக 27 கம்யூனிஸ்ட் கட்சியினர் அங்கே கைது செய்யப் பட்டார்கள். அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
22-10-71ல் சத்திரப்பட்டியில் நடைபெற்ற கலவரத்தின் காரணமாக 6 கம்யூனிஸ்ட் கட்சியினரும், 9 தி.மு.க.-வினரும் காயமடைந்தார்கள். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப் பட்டிருக்கிறது. மற்றும் அதே பகுதியில் 17 கம்யூனிஸ்ட் கட்சியினரும், 14 தி.மு.க-வினரும் கைது செய்யப்பட்டு, கோர்ட்டிலே வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
12-11-71 அன்று ஊத்துப்பட்டி கிராமத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 7 கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும், 5 தி.மு.க.வினர் மீதும் குற்றப்பத்திரிகைகள் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன. இதை வைத்துக்கொண்டு பார்த்தால் இருதரப்பிலும் கலவரங்களில் ஈடுபட்டவர்கள் யாராக