உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஒத்திவைப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

ஒத்திவைப்பு, கவன ஈர்ப்பு தீர்மானங்களின் மீது

மாவட்டத்தைப் பொறுத்தவரையில், இந்த அரசு உருவான தற்குப் பிறகு எந்தெந்த வகையிலே மிக ஆர்வத்தோடு அங்கே யுள்ள பிரச்சனைகள் கவனிக்கப்பட்டு வருகின்றன என்பதைப் புள்ளி விவரங்களோடு எடுத்துச்சொல்ல முடியும். அண்மை யிலே இரண்டு, மூன்று திங்களுக்கு முன்பு மீனவப் பெருமக்கள் உணவு நிலைமையிலே- வழக்கமாக அவர்கள் புசிக்கின்ற கிழங்குகள் அவர்களுக்குக் கிடைக்காமல் போனபோது-நான்கு வாரங்களுக்குக் கிட்டத்தட்ட 18 ஆயிரம் மீனவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் கன்னியாகுமரி மாவட்டத்தினுடைய நிலத்தீர்வை தமிழ்நாட்டோடு நீண்ட நெடுங்காலமாக இணைக்கப்பட்டு ஒருமித்த ஒரு நிலை ஏற்படவில்லை என்ற அந்த மாவட்டத்தினருடைய குறைபாட்டை அண்மையில் போக்கும் முறையிலே சில திருத்தங்களைச் செய்து தமிழ் நாட்டோடு இணைக்கும் வகையில் அந்த நிலத் தீர்வையை எடுத்த முயற்சியில் ஏற்கெனவே ஐந்தாறு ஆண்டுக்காலமாக விவசாயிகள் கட்டவேண்டிய பாக்கி ஏறத்தாழ 23 இலட்சம் ரூபாய் இருந்தது. அதைக் கன்னியாகுமரி மாவட்டத்திலேயுள்ள விவசாயமக்களுக்குத் தள்ளிக் கொடுத்துவிட வேண்டும், அதை அரசு வற்புறுத்தக் கூடாது என்று சொன்ன அந்த மாவட்ட மக்களின் யோசனையையும் அரசு ஏற்றுக்கொண்டு அதையும் தள்ளிக் கொடுத்திருக்கிறது.

நான் கன்னியாகுமரி மாவட்டத்திற்குச் சென்றபொழுது அங்குள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள், மேலவை உறுப் பினர்கள், எல்லாக் கட்சிகளையும் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் என்னைச் சந்தித்தார்கள். நண்பர் ஜேம்ஸ் அவர் களும் சந்தித்தார்கள். சந்தித்து, அங்குள்ள சில இடங்களிலே உணவு பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்று சில குறைபாடு களைச் சொன்னார்கள். நான் அவர்களுக்கு நேராகவே மாவட்ட ஆட்சித் தலைவரை அழைத்து உடனடியாக அனைத்துக் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், மேலவை உறுப்பினர்கள், அங்குள்ள ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் அனைவரையும் கூட்டிவைத்து நீங்கள் ஒரு முடிவு செய்து எந்த வகையிலே அரசு இங்கே இந்த அரிசி நிலைமை