கலைஞரின் சட்டமன்ற உரைகள்
103
மக்களுக்கு சோறுதான் போடவில்லை என்றாலும் பெயரைச் சாப்பிட்டு விடுகிறீர்களே.
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: அண்ணாவை நான் சாப்பிட மாட்டேன்.
திரு. கே.ஏ.மதியழகன்: சாப்பிட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்.
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: தலைவரவர்களே நான் பேசிக்கொண்டிருக்கும்பொழுது இவர் பேசுவது என்ன முறை?
திரு. கே.ஏ. மதியழகன்: அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று இருக்கும் ஒரு கட்சியை, அ.தி.மு.க. என்றால் எப்படி?
மாண்புமிகு கலைஞர் மு.கருணாநிதி: தலைவரவர்களே திரு.ஹாண்டே அவர்கள் பேசும்பொழுதுகூட ஏ.டி.எம்.கே. என்று குறிப்பிட்டார்கள். அப்பொழுது மதிக்குக் கோபம் வரவில்லை.
திரு. கே.ஏ. மதியழகன்: அதையும் திருத்திக்கொள்ள வேண்டியதுதான். என்றாலும் நீங்கள், முதலமைச்சராக இருப்ப வர்கள், வெளியிலே எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம், இங்கே அப்படிச் சொல்லலாமா?
மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: நான் திராவிட முன்னேற்றக் கழகம் என்று சொல்லிவிட்டு உங்களுடைய கட்சியை அப்படிச் சொன்னால் சரி. ஆனால் நான் தி.மு.க. என்றுதான் சொல்கிறேன். அதைப்போல சி.பி.ஐ., சி.பி.எம். என்று சொல் கிறேன். அப்பொழுது யாரும் கோபித்துக் கொள்வது கிடையாது.
காங்கிரஸ் (ஓ) 40, ஏ.டி.எம்.கே. 55, சுதந்திரா 5, சி.பி.எம். 5, சி.பி.ஐ.6, ஃப்ரீடம் ஃபைட்டர்ஸ் 6 ஆக, 117 பேர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனால் அவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட்டார்கள்.