22
காவிரிப் பிரச்சினை மீது
மைசூர் மாநில சர்க்காருக்கும் அளிக்கும் வகையில் சில விவரங்களைக் கூற விரும்புகிறேன்.
தமிழ் நாட்டில் காவிரிப்பாசனம் தொன்று தொட்டு இருந்து வருகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கரிகாலன் கல்லணை கட்டியதும், காவிரியின் கரையைப் பலப்படுத்தியதும், வரலாற்றுச் சான்றுகளும் தமிழ் நாட்டுக்குக் காவிரியின் மேல் இருந்த உரிமைக்கு சான்றுகளாகும் (Prescription right) 19-ஆம் கடைசியில் நூற்றாண்டின் மைசூர், பல நீர்ப்பாசனத் திட்டங்களைத் தொடங்கிய பொழுது சென்னை மாநில அரசு தனது மறுப்பினை தெரிவித்தது. அந்த மறுப்பின் காரணமாக 1892-ஆம் ஆண்டு ஒரு உடன்பாடு ஏற்பட்டது. அந்த உடன்பாட்டின் அனுபந்தத்தில் கண்டுள்ள காவிரியும் அதன் உபநதிகளும், பெண்ணை, பாலாறு, துங்கபத்திரா போன்ற 15 நதிகளில் மைசூர் அரசாங்கம் நீர்த்தேக்கங்கள் கட்டுவதினால் அந்த நீர்த்தேக்கங்களைப் பற்றி முழுமையான புள்ளி விவரங்களையும் சென்னை அரசுக்குக் கொடுத்து அதன் முழு சம்மதத்தையும் பெற்ற பிறகே கட்டலாம் என்று 1892-ம் ஆண்டு ஒப்பந்தத்தில் 2-வது, 3வது பிரிவுகளில் கூறப்பட்டுள்ளது.
மைசூர் அரசு அரசு தமிழகத்தில் குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் காவிரிப்பாசனத்தைப் பாதிக்கின்ற வகையில் மேலும் சில நீர்த்தேக்கங்களைக் கட்ட முற்பட்டபோது அன்றிருந்த சென்னை அரசும் மைசூர் அரசும் 1924-ம் ஆண்டு ஒரு உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அது, குறிப்பாக மைசூர் அரசு கிருஷ்ணராஜசாகர் அணைத்திட்டம் கட்டுவதற்கு அனுமதி வழங்குவதற்கு ஏற்படுத்திய ஓர் உடன்பாடாகும்.
அந்த உடன்பாட்டின்படி 45 ஆயிரம் மிலியன் கன அடி (45 TMC) கொள் அளவுள்ள கிருஷ்ணராஜசாகர் அணை கட்ட அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் அதே சமயத்தில் தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்து வந்த பாசனத்தோடு மேற்கொண்டு “காவிரி மேட்டூர் பிராஜக்ட் (CPM) திட்டத்தின் கீழ் 3,01 லட்சம் ஏக்கர் புதியதாகப் பாசனம் ஏற்படுத்தவும் மேட்டூர் நீர்த்தேக்கம் கட்டவும் வழிவகை செய்யப்பட்டது.