உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

காவிரிப் பிரச்சினை மீது

நடத்தினோம். அந்த விவாதத்தின்போது, திரு. வீரேந்திர பட்டீல் அவர்களும், திரு.கே.எல்.ராவ் அவர்களும், டெல்லியில் விவாதம் நடத்தினோம். அந்த விவாதத்தின்போது, திரு. வீரேந்திர பட்டீல் அவர்களும், திரு. கே. எல். ராவ் அவர்களும், தமிழ் நாட்டுக்கு 1924-ஆம் ஆண்டு உடன்பாட்டின்படி உத்திரவாதம் அளிக்கப்பட்ட தண்ணீரின் அளவு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டார்கள். அதாவது தமிழகத்திற்கு உத்திரவாதமளிக்கப்பட்ட தண்ணீரின் அளவைத் தராமல் அவர்கள் தங்களின் புதிய நீர்த்தேக்கங்களில் தண்ணீரைத் தேக்கக்கூடாது என்று வலியுறுத்தி கூறினேன். அதற்கு ஒரு தண்ணீர் தேக்க முறை (Impounding formula) நிர்ணயிக்கப்பட வேண்டுமென்று சொன்னேன். அதனையும் திரு. வீரேந்திர பட்டீல் ஒப்புக் கொண்டார்கள்.

டெல்லி விவாதம் முடிந்த பிறகு மத்திய அரசும், நமது மாநில அரசும், பல தடவை எழுதிக் கேட்டும் மைசூர் அரசு நமக்கு முழுத் தகவல்களையும் தராதது மட்டுமின்றி, சரியாகப் பதில் கூட அனுப்பவில்லை.

திட்டக் குழுவும், மத்திய நீர்ப்பாசன மின்விசை வல்லுநர் குழுவும், ஹேமாவதி போன்ற எந்தத் திட்டத்திற்கும் அனுமதி அளிக்கவில்லை,

இந்தச் சூழ்நிலையில் இந்தப் பேரவையின் உறுப்பினர்கள் மைசூர் அரசு கட்ட இருக்கும் ஹேமாவதி போன்ற திட்டங்கள், தமிழகத்தின் பாசனத்தைப் பாதிக்கும் என்று ஐயப்படுவது முறையேயாகும், ஆனால் இந்தப் பிரச்சினையை எப்படி சுமூகமான முறையில் தீர்க்க முடியும் என்பதுதான் இன்று நம் முன் உள்ள கேள்வி. இது ஒரு மாநிலத்திற்கும் மற்றொரு மாநிலத்திற்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை. ஆகையினால், மத்திய அரசுதான் இதில் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும் என்பதும் முறையாகும். எனவே அவர்கள் தலையிட்டுத் தீர்த்து வைப்பார்கள் என்று நம்புகிறேன். ஏற்படுத்தப்படுகிற எந்த உடன்பாடுகளையும் மதிக்க வேண்டும் என்பது சாதாரண ஒரு நியதியாகும். அது இல்லையென்றால்; சமூகம் ஏது? அரசு ஏது? மைசூர் மாநில மக்களிடம், தமிழக மக்களுக்கோ, தமிழக அரசுக்கோ என்றுமுள்ள நட்புறவு இதனால் பாதிக்கப்பட மாட்டாது என்றும், பாதிக்கக்கூடாது