உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காவிரிப் பிரச்சினை மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104

காவிரிப் பிரச்சினை மீது

ஆணையை கர்நாடக அரசுக்கு மத்திய அரசு பிறப்பித்திருக் கலாம். அது நமக்கு உரிமையுடையது. 1924-ஆம் ஆண்டு ஒப்பந்தத்திற்கு மாறாக இன்றைக்கு அது தேக்கி வைக்கப்பட்டிருக்கிறது. கபினி அணையோ, ஹேமாவதி அணையோ, வேறு அணைகளோ கட்டக்கூடாது என்பதல்ல நம்முடையவாதம். கர்நாடக மக்களிடத்திலே நாம் மனிதாபிமான முறையிலேதான் நடந்துகொள்கிறோம். அந்த மக்களும் வாழவேண்டும். அந்த மாநிலமும் வளமாக இருக்க வேண்டும் என்பதிலே ஐயமில்லை. தேசிய அளவிலே இப்படிப்பட்ட பிரச்சினையை அணுகவேண்டுமென்று உபதேசம் செய்யப் படுகிறது. ஆனால் கர்நாடகத்தைப் பொறுத்தவரையில், அவர் களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டிருக்கின்ற கிருஷ்ணா நதி இருக்கிறது. அதிலேயிருந்து 500 டி.எம்.சி. அவர்களுக்குக் கிடைக்கக்கூடிய அளவிற்கு, 'அவார்டு' வழங்கப்பட்டிருக்கிறது. அந்த 500 டி.எம்.சி. அவர்களுக்குப் போதாது என்று அவர்கள் வாதாடிக்கொண்டிருக்கிறார்கள். அந்த 500 டி.எம்.சி.யை அவர்கள் எப்போது வகைப்படுத்தி அதைப் பயன்படுத்தப் போகிறார்கள். அதற்கு எத்தனை ஆண்டுக் காலமாகும் என்பதெல்லாம் வேறு பிரச்சினை. நமக்கு இருப்பதோ ஒரே ஒரு காவிரிதான். காவிரியை நாம் ஆண்டாண்டு காலமாகப் பெருமளவுக்குப் பயன்படுத்தி, தமிழகத்தை இன்றைக்கு ஓரளவு வளமுள்ளதாக ஆ ஆக்கி வைத்திருக்கிறோம். இந்தச் சூழ்நிலையிலே காவிரியினுடைய பயனை நாம் பெற முடியாத ஒரு இக்கட்டான சூழ்நிலையை வரவேற்பதற்கில்லை. இப்பொழுதும் மத்திய அரசோடு ஏன் பேசக்கூடாது என்று என்னைக் கேட்பவர்களுக்கு நான் காலையிலேகூட பேரவையிலே பதில் அளிக்கும்போது குறிப்பிட்டேன். 'நாங்கள் தயாராக இருக்கிறோம். எந்த வகையிலே பேசினால் வெற்றி கிடைக்கும், வெற்றி கிடைக்குமா என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்படவேண்டும். அந்த நம்பிக்கை ஏற்படுவதற்கு என்ன வழி? இப்பொழுது கர்நாடக மாநிலம் தேக்கி வைத்திருக்கின்ற கபினித் தண்ணீரை முதலில் திறந்து விடுவதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும். அப்படி வழிவகை செய்வதன் மூலம்தான் பேச்சுவார்த்தை நடத்தினால் ஏதாவது பலன் கிடைக்குமென்ற நம்பிக்கையை தமிழகம்