18
நிதிநிலை அறிக்கை மீது
பொதுவாக நிதிநிலை அறிக்கையில் ஆண்டுதோறும் வருவாய் உயர்ந்து கொண்டே போகின்ற நிலையை நம்மால் காணமுடிகிறது. நான் கடந்த ஆண்டுகூட எடுத்துக் கூறியிருக்கிறேன். 1966-67 இந்த ஆண்டில் பெரியவர் பக்தவத்சலம் அவர்கள் முதலமைச்சராக இருந்த அந்தக் கால கட்டத்தில் இந்த மாநிலத்தினுடைய வருவாய் கணக்கு 188 கோடி ரூபாயாக இருந்தது.
அண்ணா அவர்கள்
1968-69லே பேரறிஞர் முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த காலக்கட்டத்திலே வருவாய் ரூ.248 கோடியாக இருந்தது. 1975-76ம் ஆண்டு கழக ஆட்சிக் கலைக்கப்படுவதற்கு முன்பு, இந்த மன்றத்திலே வைக்கப்பட்ட நிதிநிலை அறிக்கையின்படி, மாநிலத்தினுடைய வருவாய் ரூ.501 கோடியாக இருந்தது. இன்று மாண்புமிகு நிதியமைச்சர் அவர்கள் வைத்துள்ள இந்த அறிக்கையில் அந்த 501 கோடி ரூபாய் மூன்றரை மடங்காக உயர்ந்து 1774 கோடி ரூபாயாக பெருகியிருக்கிறது அல்லது வளர்ந்திருக்கிறது இந்தப் பெருக்கத்திற்கு அல்லது வளர்ச்சிக்கு காரணம், 1975-76லே 98 கோடி ரூபாயாக இருந்த விற்பனை வரி, இப்போது து 710 கோடி என்பதையும், 1975-76ல் 50 கோடியாக இருந்த மது ஆயத்தீர்வை இப்போது 160 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதையும், 1975-76ல் 13 கோடி ரூபாயாக இருந்த மோட்டார் வண்டி வாகன வரிகள், இன்றைக்கு 82 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதையும், 1975-76ல் 21 கோடி ரூபாயாக இருந்த முத்திரைத் தாள் வருமானம் இப்போது 62 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடுவதற்கில்லை.
ரூபாயாக உயர்ந்திருக்கிறது
இவைகளின் காரணமாக 1774 கோடி ரூபாய் என்ற அளவுக்கு நம்முடைய நிதிநிலை அறிக்கை மூன்றரை மடங்கு உயர்ந்து இருக்கிறது என்று குறிப்பிட்டாலும் கூட, பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடு எந்த அளவுக்கு ஒதுக்கப்பட்டடிருக்கிறது. 1975-76ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அளவிற்காவது ஒதுக்கப்பட்டிருக்கிறதா என்று பார்த்தால்,