கலைஞரின் சட்டமன்ற உரைகள்
51
The Tamil Nadu Chief Minister Mr. M. G. Ramachandran said here today that he would welcome my move for the joint effort by the States for more powers to States. Any such move would have the full support of the Tamil Nadu Government. He said answering to questions to a crowed press conference, but we are not for State autonomy, he clarified.
நாங்கள் மாநில சுயாட்சி என்ற அந்தக் கொள்கைக்கு 'Far' அல்ல; ஆதரவு அல்ல என்ற வகையில் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.
மாண்புமிகு திரு. எம். ஜி. இராமச்சந்திரன் : மாண்புமிகு சட்டப் பேரவைத் தவைர் அவர்களே, இன்னொரு விளக்கமும் நான் அங்கே சொன்னேன். அந்த பத்திரிகையிலே வராததற்கு நான் பொறுப்பல்ல. ஸ்டேட் அட்டானமி என்று சொன்னாலே பிரிவினை என்ற ஒருபொருள் அதிலே தொக்கி நிற்பதாக விளம்பரப்படுத்தப்பட்டது. ஆகவே அந்த வார்த்தையை நான் மறுக்கிறேன் என்ற சொன்னேன்.
கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, அதை ஹிந்துவில் சரியாகப் போட்டிருக்கிறார்கள்.
"Differentiating between autonomy and additional powers for States Mr. Ramachandran said he was hesitant to use the term 'more autonomy' because it was being understood as separation."
து
மாநில சுயாட்சி என்று சொன்னால் அது பிரிவினை வாதம் ஆகிவிடும் என்பதற்காக அப்படிச் சொல்லத் தயங்குவதாக முதலமைச்சர் சொன்னதாக இப்போது சொன்ன கருத்தைச் சரியாக வெளியிட்டிருப்பதாகக் கருதுகிறேன். முதலமைச்சர் அவர்களுக்கு நம்முடைய நாவலர் அவர்கள் பதில் அளிக்கிறார்கள். திரு முரசொலி மாறன் அவர்கள் எழுதிய மாநில சுயாட்சி. சுயாட்சி. இதற்கு நாவலர் அவர்கள் முன்னுரை எழுதியிருக்கிறார்கள். அந்த முன்னுரையில் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
இந்தியா ஒரு நாடல்ல. அது பல்வேறு மொழிவழி தேசிய னங்களைக்கொண்ட ஒரு துணைக்கண்டம் என்பதையும் வரலாற்றுச் சூழ்நிலையின் காரணமாக இந்தியா