உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

53

இல்லை என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். அதிலே நாங்களும் பின்வாங்கவில்லை.

கலைஞர் மு. கருணாநிதி : தலைவர் அவர்களே, அப்படியானால் மாநில தன்னாட்சி என்ற வார்த்தையை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?

மாண்புமிகு திரு. எம்.ஜி. இராமச்சந்திரன் : தலைவர் அவர்களே, நமது மாண்புமிகு மாண்புமிகு எதிர்க்கட் எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் என் வாயால் சொல்வதற்கு இந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்று கருதுகிறார் என்று எண்ணுகிறேன். நான் அழுந்தந்திருத்தமாகச் சொல்கிறேன். அதிக அதிகாரம் தன்னாட்சி உரிமை என்பதை இந்த அரசு, இந்தக் கட்சி நிச்சயமாக விரும்புகிறது என்பதையும், ஆனால் நாட்டுப் பிரிவினை என்பதை நாங்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்பதற்காக அந்த விளக்கம் தருவதையே நாங்கள் எதிர்க்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி : மாநில சுயாட்சி கேட்பது நாட்டுப் பிரிவினை என்று யாராவது கூறுவார்களானால் அவர்களுக்கு மாநில சுயாட்சி கொள்கைக்கு அடிப்படையிலே விரோதிகளாக இருக்கிறார்கள் என்றுதான் பொருள். மாநில சுயாட்சி கேட்டு அப்போதே இந்த வாதம் இருந்த காரணத்தால் தான் நாவலர் அவர்கள் இந்த விளக்கம் அளித்தும் நான் படித்துக் காட்டினேன். அதே போல அண்ணா அவர்களும் இதே அவையிலே பேசினார்கள். 27.6.67ல் அண்ணா அவர்கள் பேசியிருக்கிறார்கள். நான் திராவிட நாடு கோரிக்கையை விட்டுவிட்டேன். ஆனால் திராவிட நாடு கேட்பதற்கு என்னென்ன காரணங்கள் இருந்தனவோ அவற்றில் ஒன்றைக்கூட விட்டுவிடவில்லை. அதிலே ஒளிவு மறைவு இல்லை. அதைச் சொல்வதற்கு வெட்கப்பட ஒன்றுமில்லை. திராவிட நாடு என்பது தனியாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி பெற முடியும் என்று சொன்னோம். திராவிட நாடு வேண்டுமென்று கேட்டதற்குக் காரணம் இங்கே தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டும். அதை விட்டுவிடவில்லை. அடுத்து மொழி பாதுகாக்கப்பட