கலைஞரின் சட்டமன்ற உரைகள்
55
'Am I right in assuming that the D.M.K. has never had any idealism and is having always based its policy on expediency rather
than on principles?'
சாதாரண விஷயங்களுக்கு,
கொள்கைகளைவிட
அவ்வப்போது
சந்தர்ப்பத்துக்கேற்ப
தி.மு.க.
நடந்து
கொள்கிறது என்று நான் மதிப்பிடலாமா என்ற கேட்டபோது
அண்ணா சொல்லியிருக்கிறார்.
'Your assumption is wrong'.
உங்களுடைய மதிப்பீடு தவறு
'Federalism - Full autonomy'.
முழுமையாக
அதிகாரமல்ல.
சுயாட்சி,
தன்னாட்சி
வெறும்
'Full autonomy for the State egalitarianism and are these not principles?',
ல
இவைகள் எல்லாம் கொள்கைகள் அல்லவா? நாங்கள் கேட்கின்ற முழுமையான மாநில சுயாட்சியும் சமத்துவமும் சமதர்மமும் உங்களுக்குக் கொள்கையாகப்படவில்லையா என்று அண்ணா அவர்கள் திரும்ப, நிருபரைப் பார்த்துக் கேட்டிருக்கிறார்கள். எனவே மாநில சுயாட்சிக்கு 1974ஆம் ஆண்டு இங்கே தீர்மானம் நிறைவேற்றிய பொழுது அப்பொழுது எதிரே இருந்த அண்ணா தி.மு.க. உறுப்பினர்கள் சொன்னார்கள். 'நீங்கள் கேட்கிற காரணத்தால், கருணாநிதி கேட்கிற காரணத்தால் நாங்கள் மாநில சுயாட்சிக்கு ஆதரவளிக்க முடியாது' என்று, அப்பொழுது இன்றைய முதலமைச்சர் அன்றைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எம். ஜி. ஆர் அவர்களும் மாநில சுயாட்சி தேவையில்லை, மக்கள் சுயாட்சி என்கின்ற ஒரு கருத்தை நாட்டில் பரப்பி வந்தார்கள். அந்த அடிப்படையிலே அன்றைக்கு அண்ணா தி.மு.க. எம்.எல். ஏக்கள் ‘கருணாநிதி கேட்கிற காரணத்தால் நாங்கள் இந்தத் தீர்மானத்தை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று சொன்னார்கள். அப்பொழுதே நான் சொன்னேன். 'ஒரு காலத்திலே நீங்கள் ஆளுங்கட்சியாக வந்து நாங்கள் எதிர்க்கட்சியாக அமர்வோமேயானால், இப்படி ஒரு