உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

நிதிநிலை அறிக்கை மீது

பட்டிருக்கிறது என்பதை நான் மாண்புமிகு நிதியமைச்சர் டாக்டர் நாவலர் அவர்களுடைய கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

தாழ்த்தப்பட்டோர் நலனுக்காக 1975-76ல் 1.9 சதவிகிதம் ஒதுக்கப்பட்டிருக்க இந்த வரவு-செலவுத் திட்டத்தில் 1.86 சதவிகிதம்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை நான் கோடிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

எனவே முக்கியமான எல்லாத் துறைகளுக்கும் கழக ஆட்சிக் காலத்தில் ஒதுக்கப்பட்ட சதவிகிதத்தைவிட, இப்போது குறைவாகத்தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது என்பதை தெளிவாக்கத்தான் கூறுகிறேனே அல்லாமல் வேறல்ல. அப்படி ஒதுக்கப்பட்ட இந்தத் தொகைகளாவது முழுமையாக அந்தந்தத் துறைகளுக்கு அல்லது திட்டங்களுக்குச் செலவழிக்கப் பட்டிருக்கிறதா என்றால், டெல்லியில் உள்ள கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor - General of India) தனது அறிக்கையில் கூறியிருக்கிற விபரங்கள் நமக்கெல்லாம் அதிர்ச்சி அளிக்கத்தக்கவையாக இருக்கின்றன. நாம் மத்திய அரசிடம் தொகையை அதிகப்படுத்திக் கேட்டு வாங்கினால் மட்டும் போதாது. மாநிலத்தின் வருவாயை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. புதிய புதிய திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதாது, அவைகளுக்கு ஒதுக்குகிற பணத்தை உரிய முறையில் செலவழிக்க வேண்டு மென்பதற்காக அல்லது திருத்திக் கொள்ள வேண்டுமென்ப தற்காகத்தான் இவைகளை கூறுகிறேனேயல்லாமல், வேறல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 1982-83ஆம் ஆண்டுக்கான தணிக்கை அதிகாரியின் அறிக்கையைத்தான் நாம் பார்க்கிறோம். அடுத்த ஆண்டுகளுக்கான தணிக்கை அறிக்கை அவைக்கு அறிவிக்கப்படவில்லை.

1982-83ஆம் ஆண்டுக்கான கணக்குத் தணிக்கை அதிகாரியின் விபரத்தின் அடிப்படையில் பார்த்தால் வருவாய்க் கணக்கில் 561.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில், 397.72 கோடி ரூபாயும், மூலதனத் துறையில் 174.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதில் 147.37 கோடிதான் செலவு செய்யப் பட்டிருக்கிறது என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது