உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

நிதிநிலை அறிக்கை மீது

ஒத்துக்கொண்டு, ஆறாவது ஐந்தாண்டுத் திட்டப் புத்தகத்திலே அதை அவர்களே விரிவாக வெளியிட்டிருக்கிறார்கள். அதைச் சுட்டிக்காட்டுவது குற்றச்சாட்டுக்காக அல்ல. நிலைமையை விளக்குவதற்காக, தமிழகத்தினுடைய பொருளாதார நிலைமை பற்றி 1984ஆம் ஆண்டு 'இந்து' பத்திரிகை எழுதிய தலையங்கத்தில் குறிப்பிட்ட சில பகுதிகள் மிக முக்கிய மானவை. தமிழ்நாட்டினுடைய பொருளாதார நிலைமை பற்றித் தெரிவிக்கப்பட்டிருக்கின்ற கணிப்பு எந்தவிதமான மகிழ்ச்சியையும் தருவதாக இல்லை. வேலையில்லாத் திண்டாட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தை வகித்த போதிலும், தனி நபர் சாகுபடி நிலத்தைப் பொறுத்தவரை இந்த மாநிலம் இந்தியாவில் 11வது இடத்தை வகிக்கிறது. கனிப் பொருள் கிடைப்பது குறைவு. சத்தற்ற உணவு, குறைந்த போஷாக்குதான் அன்றாட நிலவரம். தேசிய சர்வே மதிப்பீட்டின்படி, தமிழ் நாட்டில் 57.2 சதவீதத்தினர் வறுமைக் கோட்டுக்குக் கீழே இருக்கிறார்கள். இந்தியாவின் சராசரி 48.13 சதவீதம்தான். மின்சார உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகிய இரு மிகப் பெரிய துறைகளில் ஏற்பட்டிருக்கும் முடக்கம் தீர்க்கப்பட வேண்டும். இந்தியாவில் மின்சார உற்பத்தி 81 சதவீதமாக இருக்கிறது. தமிழகத்தின் நிலை மிகக் குறைவாக இருக்கிறது. இந்த மாநிலத்திலுள்ள அனல் மின் உற்பத்தி நிலையங்கள் பெருமைப்படும் அளவுக்குச் செயல்படவில்லை. இந்த மாநிலத்தின் மின்சாரப் பற்றாக்குறை சூட்டை ஆற்றுவதற்கு பயன்படும் தண்ணீர் பற்றாக்குறை, பாய்லரில் ஏற்படும் குறைகள், தரமற்ற நிலக்கரி, அந்த நிலக்கரியை வடக்கே உள்ள சுரங்கங்களிலிருந்து இறக்குமதி செய்யும்போது ஏற்படும் போக்குவரத்துத் தடங்கல் ஆகியவை காரணங்களாகக் காட்டப்படுகின்றன. இவை அனைத்தும் மாநில மின்சார போர்டு நிர்வாகத்துக்கு விடுக்கப்படும் அறை கூவல். ஆனால் மாநில மின்சார வாரியம்

இந்த

அறைகூவலை, சிந்திக்கும் ஆற்றலை உருவாக்கிக் கொண்டதாகத் தெரியவில்லை. மின்சார மின்சார உற்பத்தியில் ஏற்படும் தடுமாற்றங்கள் தொழில் வளர்ச்சி முதலீட்டைத் தடை செய்வதாக இருக்கின்றன. புதிய தொழில் திறமையைக்