உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

நிதிநிலை அறிக்கை மீது

விடுவேனானால் எனது அஸ்தியிலே தோன்றுகின்ற பல லட்சக்கணக்கான தமிழ் வீரர்கள் மாநில சுயாட்சி தேடி என்னை விட 19 வயது குறைந்தவரான கலைஞருக்கு உதவி என்று அன்றைக்கு

செய்வார்கள்” முழக்கமிட்டார்கள்.

அவர்கள்

ஆனால் தொடர்ந்து அவர்கள் குறிப்பிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட முடியவில்லை.

மாண்புமிகு மேலவைத் தலைவர் : மாண்புமிகு திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் இப்பொழுது என்னைக் குறிப்பிட்டு வைத்து, நான் விவாதத்திலே பிரச்சினைக்கு உள்ளாக விரும்பவில்லை தாங்கள் விளக்கியதைப் பார்த்தால், நான் ஏதோ அதை கைவிட்டு விட்டதைப் போல அல்லது அதிலிருந்து பிறழ்ந்து விட்டதைப் போல சொல்கிறீர்களா? இவ்வளவு நீளமாக விவாதத்திற்கு என்னை இழுப்பது அவ்வளவு சரியானதாக எனக்குத் தோன்றவில்லை

கலைஞர் மு. கருணாநிதி : நீங்கள் அதைக் கைவிடவுமில்லை. கைவிட்டுவிட மாட்டீர்கள் என்பதும் எனக்கு மிக நன்றாகத் தெரியும். அப்பொழுதே இதற்காக மிகப் பெரிய போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் தங்களுடைய கருத்தாக இருந்தது. இன்னும் சொல்லப் போனால், ஒரு போராட்டத்தைக்கூட தாங்கள் நடத்தினீர்கள். சிறைச்சாலைக்கும் சென்றீர்கள்.

நான்

அவைகளை எல்லாம் சொல்வதற்கு முன்பு முந்திக் கொண்டீர்கள். நடத்தினீர்கள். அதற்குப் பிறகு இரண்டு, மூன்று மாதங்களுக்குள் எல்லாம் கழக ஆட்சி கலைக்கப்பட்டது. நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டது. அதற்குப் பிறகு நாட்டில் பல்வேறு நிலைமைகள் எல்லாம் ஏற்பட்டுவிட்டன. ஆனாலும் மாநில சுயாட்சிக் கொள்கை, அன்றைக்கு தமிழ்நாடு அளவில் தமிழரசுக் கழகத்தின் சார்பில், அவைத்தலைவர் அவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டு, மாநில அளவில் எடுத்துக் கொள்ளப்பட்டு, தமிழ் மாநிலம் மட்டுமல்லாமல் காஷ்மீரம் வரையில், மேற்கு வங்கம் வரையில், ஆந்திரா வரையில் உள்ள தலைவர்கள் எல்லாம் ஒன்றுகூடி, மாநில சுயாட்சிக்