உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

நிதிநிலை அறிக்கை மீது

1986-87 மாநில ஆண்டுத் திட்டம் ஆன்யுவல் பிளான் இதைப்பற்றி பக்கம் 27இல் பட்ஜெட் மெமோரண்டத்தில், நிதிநிலை குறிப்பில் என்ன கூறப்பட்டிருக்கின்றதென்றால், 1985-86 வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதை விட இப்போது அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1985-86 மாநிலத் திட்டம் பட்ஜெட் எஸ்ட்டிமேட்டில் 1.102.05 கோடி ரூபாய் என திட்டமிட்டு ஒதுக்கிவிட்டு, திருத்திய மதிப்பீட்டில், ரிவைஸ்டு எஸ்ட்டிமேட்டில் 1,068.89 கோடி ரூபாய் என்று குறைத்திருப்பதைக் காணும்போது, சுமார் 34 அல்லது 35 கோடி ரூபாய் திட்டப் பணிகளுக்குச் செலவழிக்கப்படவில்லை என்று தெளிவாகிறது செம்மையாக, விரிவாகத் திட்டமிட்டுப் பணிகள் நடைபெற வில்லை என்பதற்கு இது மற்றொரு உதாரணமாகும். நடப்பு ஆண்டுக்கு, 1,199 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளார்கள் என்றாலும், கடந்த ஆண்டு அனுபவத்தைப் பார்க்கும்போது, இதையாவது முழுமையாகச் செலவழிப்பார்களா என்ற சந்தேகம் ஏற்படுகிறது. மாநில ஆண்டுத் திட்டத்தில், ஆன்யுவல் பிளானில், முக்கியமான தனித் தலைப்புகளைப் பார்க்கும்போது, எனக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. பட்ஜெட் மெமோராண்டம் பக்கம் 27இல் ரிசர்ச் - எடுகேஷன் ஆராய்ச்சியும், கல்வியும் என்ற தலைப்பில் 1985-86 திட்ட மதிப்பீடு 4.90 கோடி ரூபாய். திருத்த மதிப்பீடு 1985-86இல் 3.57 கோடி ரூபாய். அதாவது 1.33 கோடி ரூபாய் குறைவாகச் செலவிடப்பட்டிருக்கிறது. Special Area Programme for Rural Development இது முக்கியமானது. ஊரக வளர்ச்சி சிறப்பு வசதித் திட்டம்; இதற்கு 1985–86 ஆன்யுவல் பிளானில் 41.75 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால் திருத்திய மதிப்பீட்டில் 30.08 கோடி ரூபாய்தான் குறிப்பிடப்பட்டிருக் கிறது. அதாவது 11.67 கோடி ரூபாய் குறைத்து செலவிடப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு பார்த்தால் ஊரக வளர்ச்சி என்ற சிறப்புத் திட்டத்தில் 30 கோடிக்கும் குறைக்கப்பட்டு ரூ.25.86 கோடி என்றுதான் ஒதுக்கப்பட்டிருக் கிறது. இது ஆன்யுவல் பிளான், மாநில ஆண்டுத் திட்டத்தை தீவிரமாக நடத்துவதற்கு பயன்படாது என்று மாண்புமிகு நிதி அமைச்சரவர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.