உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

நிதிநிலை அறிக்கை மீது

"State Planning Commission has estimated roughly 62 percent of the rural population and 53 per cent of the urban population in the State are living below the poverty line."

62 சதவீதம் கிராம மக்களும், 53 சதவீதம் நகர்ப்புற மக்களும் வறுமைக் கோட்டிற்குக் கீழே இருக்கிறார்கள் என்று 1981-82ஆம் ஆண்டு இந்த அவையிலே வைக்கப்பட்ட புள்ளிவிவரம் குறிப்பிடுகிறது. இந்த அரசினுடைய மாநிலத் திட்டக் கமிஷனால் தயாரிக்கப்பட்ட ஆறாவது ஐந்தாண்டுத் திட்டம் என்ற புத்தகம் 14.11.1983இல் இந்த அவையில் வைக்கப்பட்டது. அதற்கு மாண்புமிகு முதலமைச்சர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்கள் எழுதியுள்ள முன்னுரையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை நமது மாநிலத்தில்தான் அதிகம் என்பதை வருத்தத்தோடு ஒப்புக் கொள்ள வேண்டியுள்ளது; தொழில் வளர்ச்சியில் மூன்றாவது இடத்தில் இருக்கிறோம் என்று பெருமை கொண்டாலும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் எண்ணிக்கை மிகப் பெரும் அளவில் இருக்கும் மாநிலங்களில் 3வது இடத்தில் நாம் இருக்கிறோம் என்று கூறினார்கள். நாவலர் அவர்கள் திருப்பூரிலே பேசும்போது, இப்போது தமிழ்நாட்டில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருப்பவர்கள் எண்ணிக்கை 36.9 சதவீதம் பேர் என்ற அளவுக்குக் குறைந்திருப்பதாகக் கூறினார்கள். எப்படி இந்தத் திடீர் குறைவு ஏற்பட்டது என்று எனக்கு விளங்கவில்லை. நேற்றைக்கு முன்தினம் நிதி அமைச்சர் அவர்கள் பேரவையில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் தொழில் வளர்ச்சியில் 4வது இடத்திலே இருப்பதாகக் கூறியதாகப் பத்திரிக்கையிலே செய்தியை நான் படித்தேன். தமிழ்நாடு தொழில் வளர்ச்சியில் 3வது இடத்தில் இருக்கும்போது, வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு மேலே இருந்தது என்றால், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி 4வது இடத்திற்கு இறங்கியுள்ள இந்தச் சூழ்நிலையில் வறுமைக்கோட்டின் சதவீதம் 36 என்று எப்படிக் குறையுமென்று எனக்குத் தெரியவில்லை. நாவலர் அவர்கள் வாதத்தைச் சரியென்று ஒப்புக்கொண்டு பார்த்தாலும் கூட ஐந்து கோடி மக்களின் 36 சதவீதம் என்ற கணக்குப்படி 1 கோடி, 50 இலட்சம் பேர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ளவர்கள். இதில் 30 இலட்சம்