கலைஞரின் சட்டமன்ற உரைகள்
135
படிப்புக்கு தேர்ந்தெடுத்த நபர்கள் குறித்த ஒரு வழக்கு. அந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி திரு. மோகன் அவர்கள் தெரிவித்த கருத்தை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
வேளாண்மைப் பல்கலைக் கழகத்திற்கான வழக்கறிஞர் தேர்வு சம்பந்தப்பட்ட பதிவுப் புத்தகத்தை கோர்ட்டில் தாக்கல் செய்தார். நான் அதைக் கவனமாகப் பார்த்தேன். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பலர் முறையீடுகள் அதில் இருந்தன. அவைகள் பரிசீலிக்கப்பட்டிருக்கவேண்டும். இந்தப் பிரிவில், ஆனால் அரசாங்கத்
துறையிலே பணியாற்றுகிறவர்களின் வீட்டுப் பிள்ளைகள், தங்களுக்குச் சொந்தத்தில் நிலம் இருப்பது ஒன்றையே ஆதாரமாக வைத்து, இடம் பெற்றிருப்பது வியப்புக்குரியதாகும். அவர்கள் ஏழை விவசாயிகள், ஏழை மீனவர்கள். இவர்களுக்காக என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் அரசாங்கத் துறைகளிலே பணியாற்றுகிறவர்கள் அவர்களுக்குச் சொந்தமாக நிலம் இருப்பதை வைத்து, அவர்கள் வீட்டிலுள்ளவர்களுக்கு இடம் பெற்றிருப்பது வியப்புக்குரியது. இப்படி ஒதுக்கீட்டு இடங்களை குறிப்பிட்ட ஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர் களுக்கு வழங்காமல், கேட்பவர்களுக்கு எல்லாம் கொடுப்பது என்பது அரசு ஒதுக்கீட்டு முறைக்கு மாறானதாகும். இவர்கள் அரசு விதித்துள்ள ஒதுக்கீட்டு முறையை கவனத்தில் எடுத்துக் கொண்டார்களா என்பதே கேள்விக்குரிய ஒன்று. அரசுப் பணியில் இருப்பவர்களுடைய பிள்ளைகளும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள். ஏழை விவசாயிகள், ஏழை மீனவர்கள் போன்றவர்களுடைய நிலையை உணர்ந்து கருணையுடன் அவர்களுக்கு உதவுவதற்காக அரசு இந்த ஒதுக்கீட்டு முறையைக் கொண்டுவந்தது. ஆனால், இந்தக் குழு அந்த விதியைக் கடைப்பிடிக்கவில்லை. முழுத் தேர்வையும் செல்லாது என்று சொல்வதுதான் முறையாக இருக்க முடியும். ஆனாலும் தேர்ந்தெடுக்கப்படாத மற்றவர்கள் மனு எதுவும் போடவில்லை. அப்படிச் சொல்வதன் மூலம் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் பாதிக்கப்படலாம். ஆகவே, பாதிக்கப்பட்ட இவர்கள் பி.எஸ்சி. வேளாண்மை படிக்க சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று உத்தரவிடுகிறேன் என்று நீதிபதி அவர்கள் தன்னுடைய தீர்ப்பில் கூறியிருக்கிறார்கள்.