உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

137

in this case. "The resultant position will be that the entire selection will have to be set aside. But, unfortunately, the petitioner has not impleaded all the selected candidates. Besides, setting aside the entire selection will cause immense hardship to the selected candidates who are now pursuing the course. Therefore, it appears to me just and proper to provide remedy to the petitioner alone. Accordingly I hereby direct that the petitioner be admitted to B.Sc.(Agri.) Course with effect from 16th December 1985." என்று கால உணர்வை மனதிலே வைத்துக்கொண்டு அவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதிபதி அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து: தமிழிலே மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் சொன்னபோதே நான் அதைப் புரிந்துகொண்டேன், ஆங்கிலத்திலேயும் சொல்ல வேண்டுமென்பதற்காகக் குறிப்பிடுகிறார்கள் என்று கருது கிறேன். சிறு விவசாயிகள் என்று சான்றிதழ் வாங்கி விண்ணப்பம் அனுப்புகிறார்கள். அப்படி சான்றிதழுடன் வந்த விண்ணப்பத்தை அப்படியே பல்கலைக் கழகத்திலிருந்து குழுவுக்கு அனுப்புகிறார்கள். மக்கள் பெற்றிருக்கும்

மதிப்பெண்களின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள். நான் அதுபற்றிய முழு விவரங்களையும் தர வேண்டுமென்றாலும் தரத் தயாராக இருக்கிறேன்.

கலைஞர் மு. கருணாநிதி: நீதிமன்றத்திற்குச் சென்ற இந்த வழக்கினுடைய முழுவிவரங்களும், அது சம்பந்தமான பட்டியலும், வழக்கினுடைய முழு விசாரணைகள் மற்றும் நீதிபதியினுடைய தீர்ப்பு பற்றிய முழுவிவரங்களும் என்னிடத்தில் இருக்கின்றன. நானே தங்களிடம் தருகிறேன். பார்த்துக்கொள்ளலாம். மாண்புமிகு அமைச்சரும் பார்த்துக் கொள்ளலாம். அதையெல்லாம் பார்த்துவிட்டு, அமைச்சர் தரப்பு வாதங்களையெல்லாம் கேட்டுவிட்டுத்தான், நீதிபதி அவர்கள் இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறார்கள்.

மாண்புமிகு டாக்டர் கா. காளிமுத்து: டாக்டர் கலைஞர் அவர்களுடைய உணர்வைப் புரிந்துகொள்கிறேன். எங்களுக்கு