138
நிதிநிலை அறிக்கை மீது
வந்திருக்கிற பட்டியல் பல்கலைக் கழகம் அனுப்பியிருக்கிற பட்டியல். இதிலே நிலங்கள் வைத்திருக்க கூடியவர்கள், சிலபேர் அதிகாரிகளாக இருக்கிறார்கள். அவர்கள் வேறுவிதமான சான்றுகளைத் தந்திருக்கிறார்கள் என்பதுதான் பிரச்சினை. அதிலே இருக்கிற சிக்கல் அதுதான். அதைக் களைய தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
கலைஞர் மு. கருணாநிதி: மற்றொன்று, இதுவும் நீதிமன்றத்தில் தீர்ப்பை ஒட்டியதுதான். சற்று தாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பென்றாலும், 4.12.1985 அன்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிற காரணத்தால், நான் இதை இங்கே எடுத்துச்சொல்ல விரும்புகிறேன்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் சார்பாக, எம்.பி.ஏ. படிப்புக்கு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்கில், தலைமை நீதிபதி திரு. எம்.என். சந்தூர்க்கர் அவர்களும், நீதிபதி திரு. வெங்கடசாமி அவர்களும் அளித்த தீர்ப்பு மிகவும் முக்கியமானது. அதற்கு முன்னாலேயே உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னதாகவே, பல்கலைக் கழகத்தின் தேர்வுக் குழு கூடி, தேர்வுகள் பற்றி ஆராய்ந்து அறிக்கையைத் தாக்கல் செய்தபோதும், தேர்வில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விபரமாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உயர்நீதிமன்றமும் அந்தத் தேர்வுக் குழுவின் அறிக்கையை ஆராய்ந்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, தேர்வுக் குழுவின் அறிக்கை இது. இதில் சொல்லப் பட்டிருக்கிறது.
The following discrepancies were observed and the committee resolved to record the following facts.
The Committee observed that the marks given by the following Committee Members were erased and changed by someone other than the respective Committee Members.
அதாவது குழு உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்தப் பெயர்களைக் கொண்டவர்களின் மார்க்குகளை ஒருவர், அதாவது அந்தக் குழுவில் இல்லாத ஒருவர் 'எரேஸ்' செய்து மாற்றியிருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.