180
நிதிநிலை அறிக்கை மீது
மாத்திரம் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள், வேலைவாய்ப்புக்கான இட ஒதுக்கீடு இல்லை; ஆனால் கலைஞர் அவர்களுடைய ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோருக்கு கல்விக்கு மட்டு மல்லாமல், வேலை வாய்ப்புக்கும் ட ஒதுக்கீடு கொடுத்தது மிகவும் பாராட்டத்தக்கது என்று கூறியிருக்கிறார். மேலும் வன்னியர் உள்பட மிகவும் பிற்பட்டோருக்கும், சீர் மரபினருக்கும் 20 சதவிகிதம் இந்த அரசின் மூலமாக பள்ளி, கல்லூரிகளில் படிப்பதற்கும், அரசாங்க வேலை வாய்ப்புகள் கிடைப்பதற்கும் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது என்று திரு. மாணிக்கவேலர் அவர்கள் கருத்து அறிவித்திருக்கிறார்கள். இந்த இட ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துகின்ற அளவுக்கு, அவர்கள் முன்னேற வேண்டு மென்ற அளவுக்கு ஒரு தனி இலாக்கா அமைக்கப்பட்டு விட்டது. அதனுடைய பணிகள் விரைவிலே தொடங்கும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இதற்கிடையிலே நாம் கடந்த கவர்னர் உரையிலே 100 கோடி ரூபாய் வருமானத்திற்கான வழி வகைகளைக் கண்டோம். அதையெல்லாம் விளக்க வேண்டிய அவசியம் கிடையாது. அது எப்படி வந்தது, ஏன் வந்தது என்று நான் சொல்லவில்லை. அவர்களே சொல்லிக் கொண்டார்கள்.
கடந்த ஆட்சியில் இன்னின்ன வரிகள் தள்ளுபடி செய்யப்பட்ட காரணத்தால், எக்சைஸ் வரி அறவே ரத்து செய்யப்பட்ட காரணத்தால் ஆண்டு ஒன்றுக்கு 20 கோடி இழப்பு ஏற்பட்டு, 7 ஆண்டுகளில் 140 கோடி இழப்பு ஏற்பட்டது என்று சொன்னபோது, அவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள், 'எம்.ஜி.ஆர்.ஐ - ஊழல் என்று சொல்கிறாய், என்றெல்லாம் சொல்லிக்கொண்டார்கள். அது அவர்கள் சொல்லிக்கொண்டதே தவிர, நாங்கள் ஒன்றும் சொல்ல வில்லை. ஆனால் நிலவரங்களைச் சொல்லும்போது அதனால் பாதிக்கப்படுகிறவர்கள், நம்மைத் தாக்குவது தவறு நான் நிலவரங்களைத்தான் சொல்கிறேன்.
து,
அடுத்து, என்.ஆர்.ஐ திட்டம் என்பது ஒன்று. என்.ஆர்.ஐ. திட்டம் என்றால், அயல்நாட்டில் வாழும் இந்தியர்களை இந்தியாவில் தொழிற் திட்டங்களில் முதலீடு செய்ய ஊக்குவிக்கும் திட்டம். இதை மத்திய அரசுகூட