உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

207

அவர்கள் மறுப்புக் குறிப்பு எழுதினார்கள். நாம் அதை எண்ணிப் பார்க்கவேண்டியவர்களாக இருக்கிறோம்.

நீதிபதி ஷக்தர் குரேஷி அவர்கள் எழுதிய மறுப்புக் குறிப்பில் குறிப்பிடுகிறார்

"Right from the inception, there was hostile criticism in the Press about the Commission's composition. Its Chairman and Members were labelled as Henchmen of the Government of India. There was as apprehension in the minds of several State Governments that this commission may not be impartial and that it may make the recommendations which will be favourable to the Centre at the cost of the States, Especially those ruled by the political Parties different from the one in power at the Centre.

The Commission did try to dispel the apprehensions and to reassure the State Governments and others of its indepen- dence impartially and fair approach. The situation would have been avoided if the States work taken into confidence and the composition and the terms of reference of the Commission..." அதாவது ஆரம்பம் முதற்கொண்டு பத்திரிகையிலே கமிஷனைப் பற்றி கடுமையான விமர்சனங்கள் இருந்து வந்துள்ளன. கமிஷனின் தலைவரும் உறுப்பினர்களும் மத்திய அரசின் எடுபிடிகள் என முத்திரையிடப்பட்டுள்ளார்கள். இந்தக் கமிஷன் பாரபட்சமற்ற முறையில் செயல்படாது. அது மத்திய அரசுக்குச் சாதகமான பரிந்துரைகளைச் செய்யும். அதுவும் மத்தியிலே ஆட்சியிலே இருக்கிற கட்சிக்கு மாறுபட்ட கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களின் நலன்களுக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் என்ற ஐய உணர்வு பல மாநில அரசுகளுக்கு இருந்தது.

கமிஷன் இந்த ஐயத்தைப் போக்கி சுதந்திரத் தன்மையும், நடுநிலைமையும் தேசிய அணுகுமுறை ஆகியவற்றை மாநில அரசுகளுக்கு உணர்த்தவும் உறுதி செய்யவும் முயல்கிறது. கமிஷனின் அமைப்பைப் பற்றியும், செயலாக்கம் பற்றியும் முன்பே மத்திய அரசு மாநில