216
இ
நிதிநிலை அறிக்கை மீது
நீண்ட காலக் கடன்கள் மீது ஒத்திவைக்கப்பட்டுள்ள வட்டியையும் அறவே தள்ளுபடி செய்யப்படும் என்றும் முடிவு எடுத்து, 12.5.1989ல் ஆணை பிறப்பித்தது. இப்படி ஆணை பிறப்பித்த பிறகு நபார்டு அதற்குப் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து, நாங்கள் அதற்கு இணங்க மாட்டோம் என்று கூறிவிட்டார்கள். பிறகு நம்முடைய அதிகாரிகள் எல்லாம் அங்கே சென்றார்கள். பெரும் படையெடுப்புச் செய்தார்கள். மாநிலத்திலே இருந்து அதிகாரிகள், அமைச்சர்கள் எல்லாம் அங்கே சென்று பேசினார்கள். சில உறுப்பினர்கள்கூட பேசும்போது குறிப்பிட்டார்கள். நீங்கள் ரத்து செய்துவிட்டதாகச் சொல்கிறீர்கள். ஆனால் அந்தக் கடனை வசூலிக்க வேண்டும் என்று ஆணைகள் வந்து கொண்டு இருக்கின்றனவே என்று கேட்டார்கள். நான் அப்போதெல்லாம் உண்மையைச் சொல்லப் பயந்து கொண்டு இருந்தேன். இப்போது பயம் நீங்கிவிட்டது. காரணம் மது தண்டவதே அவர்களுடைய கடிதத்திற்குப் பிறகு அந்தப் பயம் நீங்கி விட்டது பயப்படாதே, நபார்டு நம் பக்கம் இருக்கிறது. நபார்டு உதவி செய்யும் என்று சொன்ன பிறகு, பயம் நீங்கிவிட்டது. நபார்டுக்கு என்ன சொன்னோம் என்றால், நாங்கள் கடனை வசூலிப்போம் என்று எல்லோருக்கும் எழுதிவிடுகிறோம் என்று சொன்னோம். அதிகாரிகளுக்கு என்ன சொன்னோம் என்றால், அப்படிக் கடிதம் வரும்; நாங்கள் அடிப்பதுபோல் அடிப்போம்; அழுவதுபோல் அழுங்கள்; ஆனால் யாரும் வசூலிக்காதீர்கள் என்று சொல்லி, அந்த 39 கோடி ரூபாய் கடனை வசூலிக்காமலே, அதேநேரத்திலே நபார்டுகாரர் களுடைய கண்ணில் கண்ணில் 'சத்துணவுப் பொடி காட்டினாரே' அதுமாதிரி பொடி தூவி, நாங்கள் ஒரு தந்திரமாக அதைச் செய்து அந்த 39 கோடி ரூபாய் கடன் ரத்துக்கும் வழி செய்து இருக்கிறோம்.
இப்பொழுது மத்திய சர்க்கார் அறிவித்த அந்தக் கடன் நிவாரணத்தை எந்த அளவிற்கு, எந்த நிலையில், எந்த அடிப்படையிலே தமிழ்நாட்டிலே நாம் அறிமுகப்படுத்தலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சரே குறிப்பிட்டிருப்பதைப் போல, நான் காவிரி பேச்சுவார்த்தைக்காக ஐந்தாம் தேதியன்று டெல்லிக்குச் செல்லும் பொழுது, இந்தக் கடன் நிவாரணத்தைப்