உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

239

as far as that aspect is concerned. I would like to ask the Prime Minister whether she is aware of the fact that, in one advertise- ment, a liquor Vendor from Ulhasnagar in Bombay had, in the centre of an advertisement, put a photograph of the Hon. Prime Minister, Indira Gandhi. giving the impression that the Prime Min- ister is exhorting all the people of India to consume more Liquor. I want to know whether the Government would take prompt action against such people and whether the Government would spell out its policy regarding Prohibition."

“சார், இது மிக முக்கியமான கேள்வி, இந்த அரசு மதுவிலக்கை ஆதரிக்கிறதா அல்லது எதிர்க்கிறதா என்பது தெளிவாக்கப்படவில்லை. மதுவிலக்குக் கொள்கையைப் பொறுத்தவரையில் இதுவரை குழப்பமான ஒரு நிலையே நீடித்திருக்கிறது. பம்பாய் உல்லாஸ் நகரைச் சேர்ந்த ஒரு சாராய வியாபாரி வெளியிட்டுள்ள விளம்பரத்தின் மத்தியில் பிரதம அமைச்சர் இந்திரா காந்தியின் படம் இடம் பெற்றுள்ளதே, இது மக்களை மேலும், மேலும் குடிக்க அழைப்பதைப்போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறதே, அந்த விளம்பரத்தைப் பற்றி அறிவாரா, அந்த மாதிரி விளம்பரம் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா என்பதையும் அரசு தனது மதுவிலக்குக் கொள்கையை தெளிவாக்குமா என்பதையும் அறிய விரும்புகிறேன்.

அதற்கு அன்னை இந்திரா காந்தி சொல்கின்ற பதில்:

"Sir, I have not seen this advertisement. I can say that it is very wrong to use either my photograph or the photograph of any public person, especially one who does not drink. Our Party's policy is that people should not drink. But the question is whether the Prohibition policy as followed has led to that result or not. This is our concern. That is why, in the earlier period, we had thought that we should lay stress on temperance rather than Prohibition as such. Somehow, we have to work out a policy. So far, I am sorry to say, the Prohibition policy has not worked in any place, not even in Gujarat where so much effort was made to this end"

இந்த ஆங்கிலத்திற்குத் தமிழ் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன். இந்தப் பாலிசி வெற்றி