உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242

நிதிநிலை அறிக்கை மீது

என்பதற்காகவே ஒத்துக் கொள்ளப்பட்டது என்பது அல்ல சமுதாயத்திலே. மது என்பது தேன் என்ற வகையிலும் வந்து இருக்கிறது. அதனாலே மது உண்ட என்று சொல்லுகிறபோது வண்டைச் சொல்லுவதும் உண்டு. அதனாலே அது கள் என்றோ அல்லது வேறு ஒன்று என்றோ சொல்வதற்கு இல்லை.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: ஒரு இலக்கியச் சண்டை. சிறிய சண்டை இப்போது. "சிறிய கள் பெறினே எமக்கீயு மன்னே, பெரிய கள் பெறினே யாம் பாடத்தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே" அதாவது கள் என்றே வருகிறது. புறநானூறு 235வது பாடலில். ஒளவையாரே பாடியது. (சிரிப்பு).

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பாடியவர் ஒரு

அம்மையார்.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: அதுதான் ளவையார் என்று சொன்னேன். ஒளவையாரும் ஒரு அம்மையார்தானே (சிரிப்பு)

திரு. குமரி அனந்தன்: ஒளவையார் கள் குடித்தார் என்பதை நான் ஒத்துக் கொள்வதற்கு இல்லை. அந்தக் கிழவி குடித்தாள் என்பதை இந்தக் குமரி ஒத்துக் கொள்ளவில்லை (சிரிப்பு).

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இலக்கிய ஆராய்ச்சியில் 3 ஒளவையார்களைச் சொல்கிறார்கள். சில புலவர்கள் 18 ஔவையார்களைச் சொல்கிறார்கள். அதே போல் அதியமானோடு இருந்த ஒளவையார் பாடிய பாட்டு அது. அதாவது கொஞ்சமாகக் கள் இருந்தால் எங்களுக்குக் கொடுப்பான், அதியமான். நிறைய இருந்தால் நாங்களும் அவனும் சேர்ந்து சாப்பிடுவோம் என்று ஒளவையார் பாடினார். அதற்காகச் சொன்னேன்.

கூட

ஏன் நம்முடைய இதிகாசங்களில் எல்லாம் இல்லையா என்ன? எவ்வளவோ இருக்கிறது. அன்றைக்குக் அம்மையார் சொன்னார், இந்தக் கள் குடித்தால், சாராயம் குடித்தால், மலிவு விலையில் கருணாநிதி மதுவை விற்க ஆரம்பித்தால் என்ன என்ன ஆகும் தெரியுமா? வீட்டிலே