246
நிதிநிலை அறிக்கை மீது
உறுப்பினர்களாக அமைந்து, அந்தக் குழு கொஞ்ச நாள் பணியாற்றியது. அதற்குப் பிறகு திரு. எம்.ஜி.ஆர். உடைய ஆட்சிக் காலத்திலே மீண்டும் மதுவிலக்கு ரத்து செய்யப்பட்ட நேரத்தில் அவர்கள் ஒரு பிரச்சார இயக்கமே நடத்த வேண்டுமென்று, 1 1 கோடி ரூபாய் கூட அதற்காக ஒதுக்கப்பட்டது. அப்படி ஒதுக்கப்பட்ட பணம், 5, 6 ஆண்டுக் காலமாக செலவழிக்கப்படவேயில்லை என்று நம்முடைய திரு. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தலைவராக இருக்கின்ற பொது கணக்குக் குழு அறிக்கையிலே தெரிவிக்கப்பட்டிருக் கிறது. 1 கோடி ரூபாய், 1981-82லே ஒதுக்கப்பட்ட அந்தத் 1 தொகை செலவழிக்கப்படவேயில்லை.
1981-82ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பாரா 79ல் குடிப்பதால் விளையும் தீமைகளைப் பற்றிய பிரச்சாரத்தை அரசு தீவிரமாக மேற்கொள்ள, திரைப்படங்கள், நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள், பாடல்கள் போன்றவற்றின் மூலம், மது விலக்கு பற்றி பிரச்சாரம் செய்வதற்காக முதல் தவணையாக ரூபாய் 1 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்து இருக்கின்றார்கள். ஆனால் அந்தப் பணம் செலவழிக்கப்படவே யில்லை. திரும்ப அரசாங்கக் கருவூலத்திற்கு சென்று விட்டது என்பதை மிகுந்த வேதனையோடு திரு. பீட்டர் ஆல்போன்ஸ் அவர்கள் பொது கணக்குக் குழு அறிக்கையிலே, இறுதியாகத் தெரிவித்து இருக்கிறார்கள். அவர், காட்டிக் கொடுப்பதாக எண்ணிக் கொள்ளக் கூடாது. அவர் தெரிவித்து இருப்பதைத்தான் நான் இப்போது சொல்கின்றேன். குமரி அனந்தனைப் போன்றவர்கள் செயலாளராக இருந்து மதுவிலக்கு பிரச்சாரக் குழுவை நடத்தட்டும், ஒரு கோடி அல்ல, 5 கோடி ரூபாய் மதுவிலக்கு பிரச்சாரத்திற்காகச் செலவழிக்க இந்த அரசு தயாராக இருக்கிறது. (மேசையைத் தட்டும் ஒலி) ) ஒதுக்கப்படும். செலவழிக்கப்படும். திரு. பீட்டர் ஆல்போன்ஸ் கணக்கை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளலாம். செலவழித்து இருக்கிறோமா இல்லையா என்ற கணக்கை ஒழுங்காகப் பார்த்துக் கொள்ளலாம்.