உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

341

எதிர்க்கட்சித் தலைவர் அவர்களும் சத்துணவு ஊழியர்களைப் பற்றியும் திட்டத்தைப் பற்றியும் இங்கே பேசி இருக்கிறார்கள். ஏற்கெனவே இந்தக் காப்பீட்டுத் திட்டம் எப்படி வந்தது என்றால். அன்றைக்குப் பேசும்போது நம்முடைய செல்லக் குமாரும் அதைப் பற்றிக் குறிப்பிட்டார் என்று எனக்கு நினைவு. சத்துணவுத் திட்டத்தின்கீழ் பணிபுரியும் நிரந்தர, பகுதிநேர பணியாளர்களுக்கும். உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றும்

இதர பகுதிநேர பணியாளர்களுக்கு

அளிப்பதைப் போன்று. குழு இன்ஷுரன்ஸ், அதாவது குரூப் இன்ஷுரன்ஸ் திட்டம் 1.11.1990ல் அறிவிக்கப்பட்டது. கழக ஆட்சி இருந்தபோது குரூப் இன்ஷுரன்ஸ் திட்டம் அறிவிக்கப்பட்டது. யாருக்கு? நிரந்தர, பகுதிநேரப் பணியாளர்களுக்கும், உள்ளாட்சி அமைப்பில் பணியாற்றும் இதர பகுதிநேரப் பணியாளர்களுக்கும் அளிப்பதுபோல என்று 1990 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அதன்படி 10 ரூபாய் சம்பளத்திலே பிடித்தம் செய்து, இறந்த சத்துணவுப் பணியாளர்களின் குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், கடந்த கால அரசு 1994 ஆம் ஆண்டு ஒரு ஆணை பிறப்பித்து, வேலை வாய்ப்பகத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட பகுதிநேரப் பணியாளர்கள் மாத்திரம்தான் இந்தத் திட்டத்திலே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு நிபந்தனை போட்டு விட்டது. ஆசிரியர் பணிக்கு வேலை வாய்ப்பகம் - எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ் எல்லாம் இல்லை. ஆனால், சத்துணவுப் பணியாளர்களுக்கு மாத்திரம், அவர்கள் வேலை வாய்ப்பு நிலையத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, மேற்படி குழு காப்பீட்டு திட்டத்திலே அனுமதிக்கப்படுவார்கள்; பகுதி நேரப் பணியாளர்களாக இருந்தாலும், அவர்கள் எம்பிளாய்மென்ட் எக்ஸ்சேஞ்சில் பதிவு செய்தவராக இருக்க வேண்டும் என்று போட்டு ஒரு தடை ஏற்பட்டுவிட்டது. அதனால் கடந்த காலத்தில் இந்தப் பயன் கிட்டாமல் சத்துணவுப் பணியாளர்கள் மிகுந்த வேதனைக்கு ஆளானார்கள். இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு, இறந்த சத்துணவுப் பணியாளர்கள் குடும்பத்திற்கு குழுப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த தொகையை ரூ. 60 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தி ஆணையிட்டது மாத்திரமல்லாமல். 1991 ஆம் ஆண்டு