342
நிதிநிலை அறிக்கை மீது
போடப்பட்ட நிபந்தனையையும் தளர்த்தி, பாதிக்கப்பட்ட எல்லோருக்கும் ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறது. இந்த ஆணை விரைவிலே பிறப்பிக்கப்படும் என்று இந்த அவைக்கு தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி)
நான்
நான் டெல்லிக்குச் சென்றிருந்தபோது, மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு திரு. சிதம்பரம் அவர்கள் என்னிடத்திலே பேசும்போது நான் அவரிடத்திலே ஒன்றைக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆமாம் உண்மைதான் என்றும், இது உங்களுக்குத் தெரியாதா என்று கூடக் கேட்டார்கள். என்னவென்றால் ஆர்.ஐ.டி.எப். என்ற நிதி Rural Infrastructure Development Fund (R.I.D.F.)... என்ற ஒன்று இருக்கிறது மத்தியிலே, அது 200 கோடி, 250 கோடி ரூபாய் என்று மாநிலத்திற்கு. அடிப்படை வசதிகளுக்காக அல்லது அது தொடர்பான வசதிகளுக்காக வழங்குவது வழக்கம். ஆனால் வேடிக்கை, இதை முன்பிருந்த அரசு கேட்டுப் பெறவேயில்லை. ஆண்டொன்றுக்கு 270 கோடி ரூபாய் சாதாரணமா? அவர்கள் கேட்டுப் பெறவேயில்லை. 1995-96 ஆம் ஆண்டில் பெறவில்லை. மத்திய நிதியமைச்சர் மாண்புமிகு திரு.சிதம்பரம் அவர்கள், நான் கேட்டதற்கிணங்க 271 கோடி ரூபாயை, மாநில அரசுக்கு மத்திய அரசின் சார்பாக அளித்திருக்கின்றார்கள். அதற்காக நான் என்னுடைய நன்றியை மத்திய அரசுக்கு இந்த அவையின் சார்பாகத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலே சாலை மேம்பாடு போன்ற பணிகளுக்காக மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீட்டைச் சொல்கிறேன். சில மாவட்டங்களுக்குக் குறைந்திருந்தால் கோபித்துக்கொள்ளாதீர்கள். அடுத்த ஆண்டு சரியாகச் செய்துவிடலாம்.
மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு சாலை மேம்பாடு மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்திற்கு ஒப்பளிக்கப்பட்ட விவரம் செங்கை-அண்ணா மாவட்டத்தில் 65 திட்டங்களுக்கு நபார்டு அளித்தது 11 கோடி ரூபாய். அதில் மாநிலத்தின் பங்கு 1 கோடியே 12 இலட்சம் ரூபாய். (குறுக்கீடு) மாநிலமும் பங்கு செலுத்துகிறது.
சிதம்பரனார் மாவட்டம் - 65 திட்டங்கள். 7 கோடியே 58லட்சம் ரூபாய் நபார்டு வங்கி கடன் கொடுக்கிறது. மத்திய