350
நிதிநிலை அறிக்கை மீது
நீதிமன்றத்தின் முன்பாக தமிழ்நாடு அரசினுடைய நிலையைப் பாதுகாக்கும் வகையில் இப்போது நடைபெறுகின்ற வழக்கில் 7.8.1996ல் இந்திய பிரதமருக்கு நான் நேர்முகக் கடிதம் ஒன்று எழுதினேன். அதற்குப் பதில் வராத காரணத்தால் 7.3.1997லே மீண்டும் ஒரு கடிதம் பிரதமருக்கு எழுதியிருக்கின்றேன். சட்ட ரீதியாக இந்தப் பிரச்சினையை அணுகுவோம் என்ற அந்த முதல் கட்ட யோசனையை மாத்திரம் இப்போது நான் தீரன் அவர்களுக்குக் கூறிக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
இறுதியாக சில அறிவிப்புகளை உங்கள் முன் வைக்க விரும்புகின்றேன். திரு. சுப்பராயன் அவர்களுக்கான அறிவிப்பு. அன்று அவர் மிகுந்த வேகமாக என்னவாயிற்று நிலம் என்று கேட்டார்கள். அது பற்றிய அறிவிப்பைத் தர விரும்புகின்றேன். அரசாணை எண் 4(டி) 11, நாள் 20.11. 1996ல் திருப்பூர் நகராட்சிக்குச் சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தை துணை மின் நிலையம் அமைப்பதற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் நிர்ணயித்த விலையில் வழங்கலாம் என்ற ஆணையை நானும் வருவாய்த் துறை அமைச்சரும் பிறப்பித்தோம். 13.3.1997 அன்று அது என்னவாயிற்று. ஏன் இன்னும் கிடைக்கவில்லை? முதலமைச்சர் நல்லவர், அதிகாரிகள் எல்லாம் மோசமானவர்கள் என்று சொல்லி, கடும் தாக்குதலில் அன்றைக்கு சுப்பராயன் அவர்கள் ஈடுபட்டார்கள். அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். மேற்படி நிலத்தை 11.3.1997 அன்று திருப்பூரிலே உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் செயற்பொறியாளரிடம் திருப்பூர் நகராட்சி ஒப்படைத்து விட்டது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி )
ள
பாதிக்கப்படக்கூடிய
பாட்டாளி மக்கள் எல்லாம் வரிகளை எல்லாம் போட்டுவிட்டீர்கள் என்று திருநாவுக்கரசு அவர்கள் சொன்னார். அந்த வரி விகிதப் பட்டியலை எல்லோரும் படித்துக் காட்டினீர்கள். நானும் படித்து நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. எந்த ஒரு வரியும் பாட்டாளி மக்களை வாட்டி வதைக்கக்கூடிய வரிகள் அல்ல என்பதை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.